தன்னை சிலர் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகை பாவனா போலீசில் புகார் கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையாகத் திகழ்பவர் பாவனா.

நேற்று இரவு அவர் எர்ணாகுளம் போலீசில் ஒரு புகாரை அளித்தார். அதில் மூன்று பேர் தன்னைக் கடத்திக் கொண்டு போய் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறியுள்ளார். மூன்று பேரில் ஒருவர் சுனில். இவர் பாவனாவின் கார் டிரைவராக இருந்தவர். தான் இல்லாத நேரங்களில் வேறு டிரைவர்களை பாவனாவுக்காக அமர்த்திக் கொடுப்பாராம்.

நேற்று இரவு சுனில் ஏற்பாடு செய்த டிரைவர் பாவனாவின் காரை ஓட்டி வந்தாராம். அப்போது வேறு இருவர் வலுக்கட்டாயமாக அந்தக் காரில் ஏறிக் கொண்டார்களாம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காரில் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் மூவரும்.

தாங்கள் விரும்பிய வகையில் விதம் விதமாக பாவனாவை போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்துள்ளனர். பின்னர் இரவு 10 மணி வாக்கில் அவரை பாவனாவின் நண்பர் வீட்டருகில் இறக்கிவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களாம். நடந்த சம்பவங்களை நண்பரின் துணையுடன் போலீசில் விவரித்த பாவனா, இதுகுறித்த புகாரையும் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் ஒரு டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஒரு பிரபல நடிகையை அவரது டிரைவரே கடத்தி பாலியல் தொல்லைக் கொடுத்தது திரையுலகை அதிர வைத்துள்ளது.