fbpx
Connect with us

Cinemapettai

பாவனா கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்.. பிரபல தமிழ் நடிகை விசாரணைக்கு அவசர அழைப்பு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாவனா கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்.. பிரபல தமிழ் நடிகை விசாரணைக்கு அவசர அழைப்பு

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் நடிகை பாவனா(Bhavana). தமிழில் ஜெயம் ரவியுடன் இவர் நடித்த தீபாவளி படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்று வருகிறது.

மலையாளத்திலும் மிக முக்கிய கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில் பாவனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு திடீரென சிலர் பாவனாவை காரில் கடத்தி கொண்டு போய் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

மேலும் அவற்றை செல்போனில் படம் பிடித்து மிரட்டியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக ஆறு மாதத்திற்குள் வழக்கை முடித்துவிட வேண்டுமென உச்சநீதிமன்றம் சார்பில் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியாக மலையாள முன்னணி நடிகர் திலீப் சேர்க்கப்பட்டார். திலீப் தான் கூலிப்படையை ஏவி பாவனாவை இந்த மாதிரி செய்யச் சொன்னதாக தகவல் கிடைத்தது.

இதற்காக கிட்டத்தட்ட 85 நாட்கள் ஜெயில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் விரைந்து இந்த வழக்கை முடிக்கும் வகையில் பல நடிகர்கள் நடிகைகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பிரபல தமிழ் நடிகை ரம்யா நம்பீசன் இடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. நடிகர் திலீப்புக்கு எதிராக ரம்யா வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் பல நடிகைகள் திலீப்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தது அவர் மீதான குற்றத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்து வருகிறது.

இதனால் அவருக்கு ஏழு வருடங்கள் கடுங்காவல் தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட சிலர் திலிப்க்கு ஆதரவாகவும் சிலர் கூறியதாக தெரிகிறது.

Continue Reading
To Top