Connect with us

Cinemapettai

ஆணின் அழகை வர்ணிக்கும் நடிகை அதுல்யா ரவி: இளைஞர்கள் குதூகலம்

athulya-ravi

Cinema News | சினிமா செய்திகள்

ஆணின் அழகை வர்ணிக்கும் நடிகை அதுல்யா ரவி: இளைஞர்கள் குதூகலம்

நடிகை அதுல்யாரவி ” காதல் கண் கட்டுதே ” என்ற சிறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்தப் படமே ஒரு குறும்படத்தின் வெற்றியால் பெரிய படமாக மாற்றி திரைக்கு வந்தது. இப்படத்திற்கு பிறகு நடிகை அதுல்யா தமிழ் சினிமாவிற்கு சிறந்த வருகை என்று அறியப்பட்டு வந்தார்.

தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை அதுல்யா, ஏமாளி என்ற படத்தில் கவர்ச்சியும் காட்ட தெரியும் என்ற அளவுக்கு கவர்ச்சி நாயகியாகவும் வலம் வந்திருந்தார்.

இந்நிலையில் அதுல்யாவுக்கு வரப்போகும் கணவனுக்கு என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:- “தன்னை நம்பி வரும் பெண்ணுக்கு உண்மையானவராகவும், அவளை பாதுகாப்பவராகவும் இருப்பதுதான் ஆணுக்கான அழகு என்றும், அப்படிப்பட்ட ஆணை தான் விரும்புவேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், முக வாசிகரமோ, உடல் அழகோ, சாகசங்கள் செய்வதோ ஆணுக்கான தகுதியாக நான் நினைக்கவில்லை”என்றும் கூறியுள்ளார்.

அப்படி யாராவது இருந்தா தாராளமா பொண்ணு கேட்டு வரலாம்னு அதுல்யா சொல்லிட்டாங்க.  நான் கிளம்பிட்டேன். நீங்க?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top