Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
நடிகைக்கு கொரோனா வரும் என எச்சரித்த ஜோதிடர்.. துண்ட காணோம் துணிய காணோம் என ஓட்டம் பிடித்த நாயகி
தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் பிரபல ஜோதிடர்களின் பேச்சை கேட்டு அதன்படி தான் நடந்து வருகின்றனர். அவர்கள் எந்த படத்தில் நடிக்கலாம், நடிக்கக்கூடாது, யாருடன் நடிக்க வேண்டுமென்பதை முதற்கொண்டு தீர்மானிக்கிறார்கள்.
இப்படி ஜோதிடத்தில் பெரிய நம்பிக்கை கொண்ட பெரிய நம்பர் நடிகை தான் அவர். வாழ்க்கையில் பல காதல் பிரச்சனைகளில் சிக்கி தற்போதுதான் உருப்படியாக ஒருவரை காதலித்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் காதல் முறிந்த பிறகு கடவுளே கதி என மாறிவிட்டாராம் அந்த நாயகி. அதன் பிறகுதான் கடவுள் மீதும் ஜோதிடத்தின் மீதும் அதிக நம்பிக்கை வந்ததாம்.
அதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ஆன அந்த நடிகைக்கு ஜோதிடரின் வழிபாட்டால் பெரிய அளவு நாயகியாக மாறி தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.
இந்நிலையில்தான் அந்த நடிகையின் ஜோதிடர் உங்களுக்கு கண்டிப்பாக கொரானா தொற்று ஏற்படும் என கூறியதால் தற்போது பதட்டத்தில் இருக்கிறாராம். என்னதான் பாதுகாத்தாலும் அது உங்களை வந்து தொட்டு விட்டு செல்லாமல் இருக்காது என தெரிவித்து விட்டாராம்.
இதனால் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என தற்போதே அதற்கென ஒரு குறிப்பிட்ட பணத்தை ஒதுக்கி வைத்து விட்டாராம். இதுதான் சாக்கு என காதலிக்கு பாதுகாப்பு தரும் சாக்கில் ஜவ்வு மாதிரி ஒட்டிக் கொண்டாராம் அவரது புதிய காதலர்.
எதுக்கு என் கூட இருக்கிற, உனக்கும் வந்துரும் என அந்த நடிகை கூற, வந்தா ரெண்டு பேருக்கும் வரட்டும், உலகத்தை விட்டு ஒன்னாவே போலாம் என டயலாக் பேசி ஒரேயடியாக அந்த நடிகையை மட்டை ஆக்கி விட்டாராம் அந்த இயக்குனர்.
இதனால் அந்த ஜோதிடரின் வழிபாட்டால் வீட்டிலேயே கடவுளுக்கு வழிபாடுகள் செய்து வருகிறாராம் அந்த நாயகி. மேலும் தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு சென்று விடலாமா எனவும் யோசித்து வருகிறாராம்.
