சினிமாவில் படம் திரையில் நன்றாக ஓடுகிறது என்றால் அந்த படத்தில் கதை நன்றாக அமையவேண்டும், படம் நல்ல வசூல் ஆக வேண்டும் என்றால் மாஸ் நடிகர் நடிக்க வேண்டும் இது ரெண்டுமே ஒரே படத்தில் அமைந்தால் படம் தாறு மாறாக வெற்றி அடையும்.

Anushka

இப்பொழுது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக நடிகைகளின் படம் வசூல் குவிக்கிறது இதை இதற்க்கு முன் ரிலீஸ் ஆனா நடிகைகளின் படங்களின் வசூல் ரெக்கார்ட் எடுத்து பார்த்தால் தெரியும்.

Anushka

சமீபத்தில் அனுஷ்கா நடிப்பில் திரைக்கு வந்த படம் பாகமதி இந்தப்படம் எதோ முன்னணி நடிகரின் படம் ரிலீஸ் ஆனது போல் ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Anushka

இந்த படம் முதல் நாளே உலகம் முழுவதும் 12 கோடி வரை வசூல் சேர்த்துள்ளது அதுவும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக இப்பொழுது 3 நாள் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.

அனுஷ்கா நடித்த  பாகமதி படம்  3 நாட்களில் ரூ 37 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இதில் இந்தியாவில் மட்டும் ரூ 30 கோடி வசூலாம்.மேலும், ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களிலேயே தென்னிந்தியாவில் அதிக ஓப்பனிங் இந்த படத்திற்கு தானாம்.

அதனால் கோலிவுட் நடிகர்கள் அனைவரின் வயிற்றில் புலியை கரைத்துவிட்டார் நடிகை அனுஷ்கா என கூறிவருகிறார்கள்.