Tamil Cinema News | சினிமா செய்திகள்
அவசர புத்தியால் அனுஷ்கா செய்த செயல்.. நடுரோட்டுக்கு வராத குறைதான்
சினிமாவில் படம் நல்ல வசூல் ஆக வேண்டும் என்றால் மாஸ் நடிகர் நடிக்க வேண்டும் அப்படி அமைந்தால் படம் தாறு மாறாக வெற்றி அடையும். இப்பொழுது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக நடிகைகளின் படம் வசூல் குவிக்கிறது. இதற்கு முன் ரிலீஸ் ஆன நடிகைகளின் படங்களின் வசூல் ரெக்கார்ட் எடுத்து பார்த்தால் தெரியும்.
அனுஷ்கா நடிப்பில் திரைக்கு வந்த படம் பாகமதி. இந்தப்படம் ஏதோ முன்னணி நடிகரின் படம் ரிலீஸ் ஆனது போல் ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றது. மேலும், ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களிலேயே தென்னிந்தியாவில் அதிக ஓப்பனிங் இந்த படத்திற்கு தானாம்.
இவ்வாறு பெரிய அளவில் பெயரை சம்பாதித்துள்ள அனுஷ்காவின் சம்பளம் ஏகப்பட்டது குவிகிறது. அனுஷ்கா அந்த பணத்தை எல்லாம் ரியல் எஸ்டேட் பிஸினஸில் முதலீடு செய்து வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஆந்திரா தெலுங்கானா பிரச்சனை காரணமாக அவசரப்பட்டு முடிவெடுத்து தனது சொத்துக்களை வெகுவாக இழந்து நிற்கிறாராம் அனுஷ்கா.
ஆந்திரா தெலுங்கானா பிரச்சனையில் ரியல் எஸ்டேட் தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என முக்கிய நகரங்களில் வாங்கி வைத்திருந்த இடங்களையும் வீடுகளையும் மிகக்குறைந்த ரேட்டுக்கு விற்று விட்டார். ஆனால் தற்போது அனுஷ்கா விற்ற இடங்களின் விலை எல்லாம் தாறுமாறாக எகிறி விட்டது.
செல்வம் கொழிக்கும் பூமியாக மாறியதால் அவசரப்பட்டு இப்படி முடிவு எடுத்து விட்டோமே என கவலையே சோகமாய் உருவெடுத்துள்ளாராம். அனுஷ்கா தற்போது மாதவனுடன் நடித்த நிசப்தம் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம். விரைவில் இந்த படம் வெளியாகும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
