பொதுவாக நடிகைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அதிக கவர்ச்சி, சர்ச்சை கருத்துக்கள், பொது இடங்களுக்கு செல்வது, புதுக்கடைகளை திறந்து வைப்பது, மூத்த நடிகர்களை புகழ்வது, அந்தரங்க விசயங்களை பகிர்வது போன்ற விசயங்களை செய்வது வழக்கம்.

ஆனால் இங்கு ஒரு நடிகை அறிவித்துள்ள ஆப்பர் அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் மகனும் நடிகருமான சாந்தனுவுக்கு ஜோடியாய் கண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மி கௌதம். 

actress

இந்த படத்தில் சந்தானத்தின் காமெடி சிறப்பாக இருந்தாலும் படம் சுத்தமாக ஓடவில்லை, அதுவுமில்லாமல் சாந்தனுவின் அக்கா போல் அந்த படத்தில் இருந்தார் ரேஷ்மி கௌதம்.

அதன் பிறகு இவர் லொள்ளு சபா ஜீவா கதாநாயகனாக நடித்திருக்கும் மாப்பிள்ளை விநாயகர் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அது வெளிவந்ததா இல்லையா என்றே தெரியவில்லை.

தற்போது தவ்லத், ப்ரியமுடன் ப்ரியா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படி கூகுளில் தேடினாலும் கிடைக்காத படங்களில் நடித்துவரும் இவருக்கு தமிழில் மார்கெட் சுத்தமாக இல்லாத போதும் இவர் முதலில் அறிமுகமான தெலுங்கில் இவருக்கு நல்ல இடம் உள்ளது.

தெலுங்கில் ஹோலி என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதன் பின் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் நெக்ஸ்ட் நுவ்வே (அடுத்தது நீதான்) என்னும் படத்தில் நடித்துள்ளார்.

actres

ஆதித்யா கதாநாயகனாக நடித்துள்ள ஹாரர் திரில்லர் படமான இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு ரேஷ்மி ஒரு சூப்பர் ஆப்பர் அறிவித்துள்ளார். அதாவது இந்த நெக்ஸ்ட் நுவ்வு படத்தை ஐந்தாயிரம் முறை பார்க்கும் ரசிகர் தன்னுடன் ஒரு நாள் முழுவதும் டேட்டிங் செய்யாலாம் என்பதுதான் அந்த ஆப்பர்.

ஒரு டிக்கெட் நூறு ரூபாய் என்று வைத்தால் கூட ஐந்தாயிரம் டிக்கெட் ஐந்து லட்சம் ரூபாய் வந்துவிடுகிறது. அவ்வளவு செலவு செய்து ரேஷ்மியுடன் டேட்டிங் செய்யும் ரசிகர்கள் பத்திரமாய் அவர்களை வீடு கொண்டு சேர்த்தால் பரவாயில்லை. பார்ப்போம் எத்தனை பேர் இந்த போட்டியில் வெற்றி பெறுகிறார்கள் என்று.

actress

தெலுங்கில் ஹாரர் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுவிடும். அவுனு, திரிபுரா போன்ற படங்கள் பூர்ணா, சுவாதி இவர்கள் நடிப்பில் வந்து பெருவெற்றி பெற்றன. அதே போல் இந்த படமும் வெற்றி பெரும் என்று ரேஷ்மி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் வரும் ஒரு புகைப்படத்தை அதில் வரும் வசனத்துடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ரேஷ்மி கௌதம். இதோ அந்த பகிர்வு உங்கள் பார்வைக்கு

இதன் அர்த்தம் புரியவில்லை என்றால் தெலுங்கு தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here