Tamil Cinema News | சினிமா செய்திகள்
மார்க்கெட் இல்லாததால் அப்பா வயது நடிகருக்கு ஜோடியான அஞ்சலி.. பணம் பத்தும் செய்யும்
சமீபகாலமாக நடிகை அஞ்சலி நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக எந்த படமும் சரியாக போகவில்லை. அதனால் மார்க்கெட் இழந்த நிலையில் தற்போது கிட்டதட்ட அப்பா வயது உடைய நடிகருக்கு ஜோடி போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நடிகை அஞ்சலியை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் மிகப் பிரபலமான நாயகியாக வலம் வந்தார். இடையில் குடும்ப பிரச்சனை காரணமாக சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த அஞ்சலி மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தார்.
அப்போது உடல் பருமன் அதிகமாக இருந்ததால் அவர் நடித்த படங்களில் ஹீரோவுக்கு அக்காவைப் போல் தெரிய ஆரம்பித்தார். இதனால் மீண்டும் பட வாய்ப்புகள் குறையும் நிலைமை ஏற்பட்டது. அதனால் உடல் எடையை குறைத்து தற்போது மிகவும் ஒல்லியாக மாறிவிட்டார்.
இருந்தும் பட வாய்ப்புகள் வந்த பாடில்லை. அதன் விளைவு தற்போது தெலுங்கில் மிக மூத்த நடிகரான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதுவரை லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அஞ்சலிக்கு பாலகிருஷ்ணா படத்திற்காக சுமார் ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட உள்ளது. ஏற்கனவே நயன்தாரா, சோனாக்ஷி சின்கா ஆகியோர் உடன் கோடிகளில் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் நடிக்க தயங்கி விட்டனர்.
காசு இல்லாததால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் எப்படியாவது முன்னணி நடிகையாக வந்து விட வேண்டும் என விடா முயற்சியாக இருக்கிறாராம் அஞ்சலி.
