fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சமுத்திரக்கனிக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது.. அஞ்சலி பரபரப்பு பேட்டி

nadodigal-2-anjali

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சமுத்திரக்கனிக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது.. அஞ்சலி பரபரப்பு பேட்டி

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நட்பை பற்றி எடுக்கப்பட்ட நாடோடிகள் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை சமுத்திரக்கனி இயக்குகிறார். இப்படத்தில் பழைய முகங்களாக சசிகுமார், பரணி மற்றும் நமோ நாராயணன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மற்ற அனைவரும் கதைப்படி புதியவர்கள். அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது சிறப்பு.

நாடோடிகள் 2 படத்தை பற்றிய அஞ்சலி கூறியதாவது, சமுத்திரக்கனி அண்ணன் எப்போதும் எனது குடும்பத்தில் ஒருவராக என் நலனில் அக்கறை கொள்வர். அதனால் இப்படத்தில் வாய்ப்பளித்த அவருக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது. ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் போது அதன் முதல் பாகத்தில் கதைக்களத்தை மோசம் செய்யாமல் இருக்க வேண்டும்.

நடப்பு விஷயங்களை சமூக அக்கறையோடு பிரதிபலிக்கும் படம். இப்படத்தில் எனது கேரக்டர் பெயர் செங்கொடி. இந்த படத்தில் நான் சண்டை எல்லாம் போட்டு இருக்கேன்”என்று புன்னகை மலர பேட்டி கொடுத்தார்.

சமீபகாலமாக இரண்டாம் பாகமாக எடுக்கப்படும் திரைப்படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top