அந்தரங்க காட்சிகளை நீக்கியதால் கடும் கோபத்தில் ஆண்ட்டி நடிகை.. வசூல் பயத்தால் இயக்குனர் எடுத்த முடிவு

பல மிரட்டலான கதைகளை கொடுத்த அந்த இயக்குனர் தற்போது பயங்கர திகில் படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் ஹீரோயின் தற்போது இயக்குனரின் மேல் தீராத கோபத்தில் இருக்கிறாராம்.

அதாவது இந்த படத்திற்காக இயக்குனர் நடிகையை அணுகிய போது அவர் வேண்டாம் என்று முதலில் மறுத்திருக்கிறார். ஏனென்றால் இந்த படத்தில் ஆடை இல்லாமல் சில காட்சிகள் இருப்பதால் நடிகை இந்த படத்தில் நடிக்க தயங்கி இருக்கிறார்.

ஆனால் இயக்குனரோ இது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு, இதன் மூலம் பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என்று சமாதானம் செய்து நடிகையை சம்மதிக்க வைத்திருக்கிறார். அதன் பிறகு நடிகையும் அந்த காட்சியில் நடித்து கொடுத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சோசியல் மீடியா அனைத்திலும் நடிகை இப்படி ஒரு காட்சியில் நடித்திருப்பது பரபரப்பை கிளப்பியது. மேலும் படம் வெளிவந்த பிறகு தன்னுடைய மார்க்கெட் எகிறும் என்ற நம்பிக்கையில் நடிகை காத்திருந்தார். ஆனால் தற்போது அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக இயக்குனர் செய்த ஒரு வேலை அவரை கோபப்படுத்தியுள்ளது.

ஏனென்றால் சமீபத்தில் புதுமை இயக்குனர் புது பாணியில் இயக்கி நடித்திருந்த அந்த படத்தில் இளம் நடிகை ஒருவர் ஆடை இல்லாமல் நடித்திருந்தார். அது சில விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதை பார்த்த இயக்குனர் தற்போது இந்த படத்தில் நடிகை கஷ்டப்பட்டு அதிக டேக் எடுத்து நடித்த அந்த காட்சிகளை எல்லாம் கட் பண்ணி விட்டாராம்.

அந்த காட்சிகளால் படத்திற்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் வராமல் போய்விடுவார்களோ என்ற எண்ணமும், அதனால் வசூல் குறைந்து போய்விடும் என்ற பயம் தான் இயக்குனரின் இந்த முடிவுக்கு காரணமாம். நடிகை இந்த படத்தை வைத்து தான் அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் இயக்குனரின் இந்த முடிவால் அவர் பயங்கர கோபத்தில் இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.