தற்போது பல நடிகைகள் மிகவும் துணிவாக தங்களுக்கு நேர்ந்த வன்கொடுமைகள் குறித்தும் தனிப்பட்ட வாழ்விலும் சினிமாவிலும் எப்படியெல்லாம் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் என்பது குறித்தும் பேசி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் காற்று வெளியிடை படத்தில் நடித்த நாயகி அதிதி ராவ் சிறு வயதில் கோவிலில் ஒருவர் தன் வயிற்றை திடீரென்று தடவினார் என்று கூறி தனது வேதனையை வெளியிட்டிருந்தார்.

அதே போல் தற்போது தனது வாழ்வில் ஒரு விஷயத்தை வெளியிட்டிருக்கிறார் ஒரு நடிகை. அவர் வேறு யாருமில்லைங்க நடிகை வித்யா பாலன். முதலில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டு பிறகு ஹிந்தியில் அடியெடுத்து வைத்து கொடிகட்டி பறப்பவர்.

இவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் வித்யாசமான ஒவ்வொரு கதைக்கருவை கொண்டிருக்கும். கவர்ச்சியை மட்டும் நம்பாது நடிப்பில் முழு கவனம் செலுத்தி அதன் மூலம் ஹிந்தி திரையுலகில் தனக்கென ஒரு பெரிய இடத்தை தக்க வைத்திருப்பவர். டர்டி பிக்சர்ஸ், கஹானி போன்ற படங்கள் இவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்த படங்கள்.

சரி தலைப்பில் சொல்லிய செய்திக்கு வருவோம். ஹிந்தி திரையுலகின் மற்றொரு பிரபல நடிகையான நேஹா துபியா அவர்கள் பல பிரபலங்களை பேட்டி எடுத்து தனது Saavn வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். சானியா, பர்ஹான் அக்தர், ரிஷி கபூர் போன்ற பிரபலங்களை தொடர்ந்து நடிகை வித்யா பாலனையும் தற்போது பேட்டி எடுத்துள்ளார். அந்த பேட்டியில் பல விவகாரமான விஷயங்களை போட்டுடைத்தார் வித்யாபாலன்.

அதில் முக்கியமான சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு

“எனது சிறு வயதில் மும்பையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன், அப்போது ஒரு நாள் மும்பையின் லோக்கல் டிரையினில் பயணிக்க வேண்டியிருந்தது. நான் பயணித்துக் கொண்டிருந்த போது ஆட்கள் அதிகம் இல்லாத அந்த கம்பார்ட்மென்டில் ஒரு ஆள் என்னையும் அங்கிருந்த எனது தோழிகளையும் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தார். நான் திடீரென்று அவரை பார்த்த போது ஏதோ வித்யாசமாக தோன்றியது. தயங்காமல் உடனே அவன் இருந்த இடத்திற்கு சென்றேன். அப்போது நான் கண்டது எனக்கு அருவருப்பை ஏற்படுத்தியது.

ஆம் அவன் சுயஇன்பம் செய்து கொண்டிருந்தான். எனக்கு வந்த கோபத்தில் என் கையில் இருந்த நோட்டு புத்தகம் கொண்டு அடி அடி என்று அடித்து அவனை டிரையினிலிருந்து துரத்தி அடித்தேன். அவன் மாட்டிக்கொண்ட அதிர்ச்சியில் டிரெயினிலிருந்து உடனே குதித்து வெளியேறினான்.

பொது இடத்தில் இது போன்ற அசிங்கங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது, நான் பார்த்தது மட்டுமல்ல, பலர் பல அசிங்கங்களை என்னிடம் கூறியுள்ளனர். இது போன்ற அசிங்கங்களை உங்கள் தனிப்பட்ட இடங்களில் வைத்துக்கொள்ளுங்கள் பொது இடங்களில் பலர் புழங்கும் இடத்தில் இந்த அசிங்கங்களை செய்தால் இப்போதும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்” இவ்வாறு கூறியுள்ளார்.