fbpx
Connect with us

Cinemapettai

தொடரும் கொலை மிரட்டல்கள்.. பயத்தில் ஆண்ட்ரியா.. புத்தக வெளியீடு நடக்காமல் இருந்ததன் நோக்கம் என்ன ?

andrea-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடரும் கொலை மிரட்டல்கள்.. பயத்தில் ஆண்ட்ரியா.. புத்தக வெளியீடு நடக்காமல் இருந்ததன் நோக்கம் என்ன ?

நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் தமிழக அரசியல் கட்சிகளை ஆட்டம் காணும் அளவுக்கு ஒரு பலான செய்தியை வெளியிட்டார். அதாவது தான் ஒரு திருமணமான அரசியல்வாரிசுடன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொடர்பில் இருந்தேன்.

ஆனால் அவர் என்னை மிகவும் துன்புறுத்தினார். இதனால் சில மாதங்கள் ஆயுர்வேத சிகிச்சையில் இருந்து மீண்டு தற்போது அந்த நபர் யார் என்கிற விவரத்தை தான் எழுதிய ப்ரோக்கன் விங்க்ஸ் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் அந்த புத்தகம் அக்டோபர் 17-ம் தேதி வெளியிடப் போவதாக ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த அரசியல் வாரிசு அந்த புத்தகத்தை வெளியிடாமல் இருப்பதற்காக தொடர்ந்து ஆண்ட்ரியாவுக்கு கொலை மிரட்டல்கள் கொடுத்துள்ளார். மேலும் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஆண்ட்ரியாவை இருக்குமிடம் தெரியாமல் அழித்து விடுவேன் என்றும் தாறுமாறாக மிரட்டியுள்ளார். இதனால் மிரண்டு போன ஆண்ட்ரியா தன்னுடைய புத்தக வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

அதே சமயத்தில் அந்த அரசியல்வாதி யார் என்ற செய்தியை குறிப்பிட்ட செய்தி நிறுவனமும் அவசர அவசரமாக அந்த செய்தியை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top