தல, தளபதி குறித்து பிரபல நடிகை/அரசியல்வாதியின் கருத்து!!

தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக இருக்கும் தல அஜித் மற்றும் இளையதளபதி விஜய் குறித்த செய்திகள் வராத நாளோ அவர்களை குறித்து பிரபலங்கள் கருத்து தெரிவிக்காத நாளோ இதுவரை இருந்ததில்லை.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகையும், நடன இயக்குனரும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் அஜித், விஜய் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.

அஜித் குறித்து அவர் கூறியபோது, “தல அஜீத் ஒரு சிறந்த மனிதர். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று எல்லா இளைஞர்களும் அவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்

அதேபோல் விஜய் குறித்து அவர் கூறியபோது, “தளபதி விஜய் சிறந்த இதயங்களின் அரசன் என்று கூறலாம். அனைவரையும் திருப்திபடுத்த நடிப்பில் அவர் எடுக்கும் முயற்சிகள், அர்ப்பணிப்பு அளவில்லாதது. அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர்” என்று கூறியுள்ளார்.

தல, தளபதி குறித்து காயத்ரி ரகுராம் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

Comments

comments