fbpx
Connect with us

Cinemapettai

காதல் என்ற பெயரில் ஓசியில் மங்களம் பாடும் பிரபல இயக்குனர்.. சலிக்காமல் செலவு செய்யும் நடிகை

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

காதல் என்ற பெயரில் ஓசியில் மங்களம் பாடும் பிரபல இயக்குனர்.. சலிக்காமல் செலவு செய்யும் நடிகை

தமிழ் சினிமாவில் வரும் வடிவேலுவின் எனக்கு நாலாவது உனக்கு ஏழாவது என்ற காமெடி கணக்கில் ஒரு ஜோடி காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். முன்னணி நடிகையாக மாஸ் காட்டினாலும் அம்மணியின் குடும்ப வாழ்க்கையை தமாசாதன் சென்று கொண்டிருக்கிறது.

திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்த இருவரையும் இந்தக் கொரானா தற்சமயம் பிரித்து வைத்துள்ளதாம். அதுமட்டுமில்லாமல் ஒரே அப்பார்ட்மெண்டில் இருவரும் செய்த அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை என அப்பார்ட்மெண்டில் வசிக்கும் பலரும் கம்பிளைன்ட் செய்ததாக தகவல்கள் கிடைத்தது.

தற்போது கொரானா பிரச்சனை முற்றி இருப்பதால் வேறு வழி இல்லாமல் இருவரும் பிரிந்து இருக்கிறார்களாம். இதற்கிடையில் நீ இல்லாம நான் இல்ல, நான் இல்லாமல் நீ இல்லை எனும் அளவுக்கு பேச்சுகள் பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையிலேயே இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்றால் சந்தேகம்தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

எது எப்படியோ, ஆனால் அந்த பிரபல இயக்குனர் மட்டும் அம்மணியின் காசில் செம சொகுசாக வாழ்ந்து வருகிறார் என பொறாமைப்படுகிறது கோலிவுட். சமீபத்தில்தான் விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கி தனது காதலருக்கு பரிசளித்தார் அந்த பிரபல நாயகி.

அந்த இயக்குனர் சுற்றுவது, வாங்குவது என எல்லாமே அம்மணியின் பணத்தில் தானம். அந்த அளவுக்கு அம்மணி அந்த இயக்குனரை உருகி உருகி காதலித்து வருகிறாராம். அந்த காதலருக்கு சொந்த அபார்ட்மெண்ட், சொகுசான கார், அடிக்கடி வெளிநாடு ட்ரிப் என இந்த உலகத்தில் இல்லாத அளவுக்கு சந்தோஷத்தை கொடுத்து வருகிறாராம் அந்த நாயகி.

வந்தவரை வாழ்வு தான் என கொண்டாட்டத்தில் குதிக்கிறாராம் அந்த இயக்குனர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய பழைய காதலர்களை வெறுப்பேத்த வேண்டுமென்றே நடிகை இப்படி செய்து வருகிறாராம்.

Continue Reading
To Top