Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதலிக்காக பல தியாகங்கள் செய்யும் பிரபல இயக்குனர்.. என்ன வேணாலும் பண்ணுவாராம்
தமிழ்சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் தான் அந்த பிரபல நடிகை. இவருக்கும், ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்த பிரபல இயக்குனருக்கும் காதல் மலர்ந்துள்ளதால் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணம் சென்று, பார்ப்பவர்களை வெறியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பிரபல நடிகை சமீபத்தில் ஒரு சாமி படம் ஒன்றில் பிரபல காமெடி நடிகருடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக விரதம் இருந்து பல கோவில்களுக்கும் சென்று வருகிறார். கூடவே தன்னுடைய காதலரையும் பாதுகாப்புக்கு அழைத்துச் செல்கிறாராம்.
நாயகி தான் இப்படி செய்கிறார் என்றால் இயக்குனரோ அவருக்கு மேல் இருக்கிறார் போல. காதலியின் படம் சக்ஸஸ் ஆக வேண்டுமென சமீபத்தில் மாலை போட்டுக்கொண்டு சபரிமலை கிளம்பினார். மேலும் நாயகியின் பாதுகாப்புக்காகவே தனக்கு வரும் பட வாய்ப்புகளை எல்லாம் உதாசீனப்படுத்தி வருகிறாராம்.
இதனால் இவரை நம்பி பிரயோஜனம் இல்லை என இயக்குனருக்கு வாய்ப்பு தரவே தயாரிப்பாளர்கள் யோசித்து வருகின்றனராம். தெரிந்தும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் காதல் தான் முக்கியம் என கம்பி நீட்டி விட்டார்.
ஆனால் கோடம்பாக்க வாசிகள், நடிகைக்காக ஏன் சபரிமலை மட்டும்தான் போடுவாரா. அலகு குத்துவது, காவடி எடுப்பது, மேலும் திருப்பதி சபரிமலை பழனி ஆகிய கோவில்களுக்குச் பாதையாத்திரை வருவேன் என வேண்டுவது, பூச்சட்டி எடுப்பது போன்றவற்றை செய்யலாமே(அதெல்லாம் வலிக்கும் கோபால்) என கிண்டலடித்து வருகின்றனர்.
நோகாம நோம்பு கும்பிடனும் போல..
