இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க’ படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராக நடித்தவர் ‘ பகோடா ‘பாண்டி’ இவர் தற்போது ஒரு படத்தில் நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி ஜோடியாக நடித்திருப்பது தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் போஸ்டர் மூலம் கவனத்தை ஈர்த்திருக்கும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ படத்தில் இருவரும் நடித்திருப்பது பலருக்கு அதிர்ச்சி கொடுத்தாலும் அது தான் உண்மை.

புதிய கீதை’, ‘ராமன் தேடிய சீதை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஜகன்நாதன் தான் ’என் ஆளோட செருப்ப காணோம்’ படத்தை இயக்குகிறார்.

படம் குறித்து இயக்குனர் ஜகன்நாதன் கூறுகையில் இப்படத்தின் கதையில் ஒரு செருப்பு, குடை, மழைக்காலம் இதை சுற்றியே கதை அமையும். நாயகன் செருப்பென்றால், நாயகி மழை, பகோடா ‘பாண்டி ஹீரோ என்ற தகவல் ஆனந்திக்கு நண்பர்கள் மூலமாக போக, தனக்கு தேதிகள் பிரச்சனை என கூறி படத்திலிருந்து விலகுவதாக கூறினார்.

பகோடா ‘பாண்டியை வைத்து எடுத்த மாதிரி காட்சிகளை ஆனந்தியை நேரில் சந்தித்து  காண்பித்ததும் அசந்து போன ஆனந்தி, தான் நிச்சயம் இதில் நடிப்பதாக என்னிடம் உத்தரவாதம் அளித்ததுடன், இவர் பெரிய நடிகராக வருவார் என கூறி பாராட்டினார்.

இப்படத்தில் பகோடா ‘பாண்டி என்ற பெயரை நீக்கி ‘தமிழ்’ என்ற பெயரில் நாயகனாக அறிமுகப்படுத்துகிறோம். இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக ஜகன்நாதன் தெரிவித்தார்.