Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகை அம்பிகாவுக்கு பல கணவர்கள், ஆனால் இரண்டே இரண்டு மகன்கள் தான்.. பகீர் கிளப்பிய பிரபலம்
கேரள இறக்குமதியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர் ரஜினி, கமல் என அனைவருடனும் பல படங்களில் ஜோடி போட்டு ரசிகர்கள் மத்தியில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை அம்பிகா.
சினிமாவில் கொடிகட்டிப் பறந்த அம்பிகாவுக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. முதலில் வாழ்க்கையை வெறுத்து அமெரிக்காவில் செட்டிலான அம்பிகா தற்போது, சில படங்களில் நடிப்பதற்காக சென்னையில் தனது மகன்களுடன் செட்டிலாகிவிட்டார்.
நடிகை அம்பிகாவுக்கு பல கணவர்கள் இருப்பதாகவும் ஆனால் இரண்டே இரண்டு மகன்கள் தான் என பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயில்வான் ரங்கநாதன் ஒருமுறை அம்பிகாவை பேட்டி எடுக்கும்போது, எனக்கு எத்தனை கணவர்கள் என்பதை நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் எனவும், ஆனால் இரண்டு மகன்கள் மட்டும் தான் அம்பிகா ஜாலியாக குறிப்பிட்டாராம்.
அதை கேலியும் கிண்டலுமாக கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒரு நடிகை விளையாட்டுக்கு கூறினால் அதை அப்படியே கூறுவது நியாயமில்லை என ரசிகர்கள் அவர்மீது செம டென்ஷனில் இருக்கின்றனர்.
இதுபோலத்தான் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய விஷயங்களை அவர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். ஆனால் உண்மையில் அம்பிகாவுக்கு இரண்டு கணவர்கள் மட்டும்தான்.
முதலில் 1988 ஆம் ஆண்டு என்ஆர்ஐ பிரேம் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டார். ஆனால் 1996 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் 2000 ஆண்டு நடிகர் ரவிகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரே வருடத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

ambika-cinemapettai
