ராட்சசன்

முண்டாசுப்பட்டி ராம்குமாரின் இரண்டாவது படம். காமெடி ஜானரில் முதல் படம் என்றால் முற்றிலும் வித்யாசமாக இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் இரண்டாவது படம். படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலிவுட் செல்லுமா அல்லது ஹாலிவுட் செல்லும என்று பேசி வருகின்றனர்.

Raatchasan

இந்நிலையில் படத்தின் 25 வது நாளும் இயக்குனரின் பிறந்தநாளும் ஒரே தேதியில் தான் வந்தது. ஏற்கனவே பல பேட்டிகளில் இயக்குனர் ராம்குமார் பற்றி பெருமையாகவே பேசியவர் அமலா பால்.

“ஹாப்பி 25 வைத்து பிறந்தநாள், ஊப்ஸ்  ராட்சசனின் 25 வது நாள். கூடவே பிறந்தநாள் வாழ்த்துக்களும். உங்கள் பணி மீது நீங்கள் வைத்துள்ள பாஷன் மற்றும் ஈடுபாட்டை நான் மதிக்கின்றேன். ஆனால் என் ஆசை உங்களின் பிரிய சகி உங்களை விரைவில் தேடி கண்டு பிடிக்கட்டும். ஏனென்றால் நீங்கள் அவளை தேட மாட்டீர்கள். சிறந்த பிறந்தநாளாக இது அமையட்டும்.” என்று ட்விட்டரில் வாழ்த்தினார்.