fbpx
Connect with us

Cinemapettai

இரண்டாவது கணவரை விவாகரத்து செய்கிறாரா? அமலா பால்.. புது கல்யாணம் ஒரு மாசம் கூட தாங்கல போல

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டாவது கணவரை விவாகரத்து செய்கிறாரா? அமலா பால்.. புது கல்யாணம் ஒரு மாசம் கூட தாங்கல போல

நடிகை அமலாபால் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

amala-paul-first-marriage

amala-paul-first-marriage

திருமணத்திற்கு பிறகு அடுத்த ஒரு வருடத்திலேயே விஜய்யை விட்டுப் பிரிந்துவிட்டார். அதன் பிறகு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த அமலாபால் பிரபல இந்தி பாடகர் ஒருவருடன் இரண்டு வருடங்களாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த செய்தி பரவலாக பேசப்பட்டது.

இதற்கிடையில் அவர்களுக்கு திருமணமானதை போல் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வெளியான கொஞ்ச நேரத்திலேயே அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெலிட் செய்துவிட்டார்.

amala-paul-second-marriage

amala-paul-second-marriage

அதன் பிறகுதான் சனி நடு வீட்டில் உட்கார்ந்து சீட்டுக்கட்டு விளையாடி இருப்பார் போல. என்னை கேட்காமல் ஏன் புகைப்படத்தை வெளியிட்ட? என தனது இரண்டாவது கணவருடன் சண்டை போட்டதாக தெரிகிறது.

நாளுக்கு நாள் சண்டை முற்றி தற்போது அடுத்த விவாகரத்துக்கு ரெடியாகி விட்டது என்று கூட சொல்லலாம். சமீபத்தில் அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மீம்ஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில் காதல் என்று வாயால் சொல்வதெல்லாம் உண்மை ஆகுமா என்பதை போல இருந்தது. அதாவது கணவர் பவனிந்தர் சிங் தன்னை உண்மையாக காதலிக்கவில்லை என்பதை தெளிவு படுத்தும் விதமாக அந்த புகைப்படம் அமைந்தது.

அதில் இடம்பெற்றிருந்த வாக்கியம் என்னவென்றால், காதலர், நீ என் காதலி நீ எனக்கு சொந்தம் என்று கூறுவதைப் போலவும், அதற்கு காதலி,யாரும் யாருக்கும் சொந்தமில்லை என்பதைப் போலவும் இருந்தது.

இதனால் தற்போது தனது அடுத்த கணவரையும் விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கிறாராம் அமலாபால். அதுமட்டுமில்லாமல் தற்போது புதிதாக அமலாபாலுக்கு பாலிவுட் நடிகர் ஒருவரின் அரவணைப்பு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இதனை கலாய்க்கும் வகையில் நம்ம நெட்டிசன்கள் இஷ்டத்திற்கு அமலாபாலை வச்சு செய்துவருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top