Tamil Cinema News | சினிமா செய்திகள்
விவாகரத்துக்கு தனுஷ்தான் காரணமா.. சந்தேகத்தை கிளப்பும் அமலாபால் பதில்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் இயக்குனர் விஜய்யின் தந்தை தேனப்பன், விஜய் அமலாபால் விவாகரத்திற்கு முழுக்க முழுக்க தனுஷ் தான் காரணம் என பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார். இதனால் தமிழ் சினிமா உலகமே ஆட்டம் கண்டது.
தேனப்பன், திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என சம்மதம் வாங்கிக் கொண்டுதான் அமலாபாலை விஜய்க்கு திருமணம் செய்து வைத்ததாகவும், ஆனால் அதன் பிறகு அமலாபாலை வற்புறுத்தி விஐபி படத்தில் தனுஷ் நடிக்க வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விஐபி படம் பெரிய வெற்றி பெற உடனடியாக அம்மாகணக்கு என்ற படத்தை அமலா பாலை வைத்து தயாரித்தார். இதனாலேயே மீண்டும் அமலாபாலுக்கு மீண்டும் சினிமாவின் மீதான ஆசையை தூண்டுவதற்கும் காரணமாகவும் அமைந்ததாக குற்றம் சாட்டினார்.
அதைக்கேட்ட அமலாபால் சமீபத்தில் அதற்கான விடையை கொடுத்துள்ளார். விவாகரத்து முடிவு எனக்கும் ஏ எல் விஜய்க்கும் சம்பந்தப்பட்டதாகும். இதில் எப்படி இன்னொருவர் வரமுடியும் என்றும், நிருபர் தனுஷ்தான் அதற்கு காரணமாமே என கேட்டபோது, தான் அதைப்பற்றி பேச விரும்பவில்லை என மழுப்பி உள்ளார். மேலும் தனுஷ் தனது நலம் விரும்பி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மேலும் சந்தேகத்தை கோலிவுட் வட்டாரங்களில் கிளப்பியுள்ளார். கடைசிவரை அமலாபால் தனுஷை பற்றி பேசாமல் சென்றது இருவருக்கும் இடையே உள்ள ரகசியத்தை மறைப்பதற்கான வேலை எனவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.
