நடிகை அமலாபால் தமிழில் சிந்து சமவெளி படத்தில் முதல் முதலில் நடித்தார் ஆனால் அவருக்கு அந்த படம் சொல்லும் அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை  பின்பு மைனா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அந்தஸ்த்தான இடத்தை பிடித்தார். பின் வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், காதலில் சொதப்புவது எப்படி, அம்மா கணக்கு என  பல படங்களில் நடித்துள்ளார்.

amala paul
amala paul

ஒரு காலகட்டத்தில் இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்தார் பின்பு  திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால்,  பின்பு  கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றார். தற்போது தனித்து வாழும் அவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அமலா பால் நடிப்பில் வெளியான திருட்டு பயலே படத்திற்கு  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

amala-paul

இந்த நிலையில் நடிகை அமலா பால் நடனப்பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாம்பலம் காவல் நிலையத்தில் திடீரென புகார் அளித்தார் நடிகை அமலா பால். அந்த புகாரில் மலேசியாவில் இருக்கும் தனது நண்பருடன் டின்னர் சாப்பிட செல்ல வேண்டும் என அழகேசன் அழைத்ததாக தனது புகாரில் அமலா பால் கூறியிருந்தார்.

Amala Paul

நடிகை அமலாபால் புகார் அளித்த 1 மணி நேரத்தில் பிரபல தொழிலதிபர் அழகேசனை அதிரடியாக  கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

மேலும் அழகேசன் மீது காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். இதை பற்றி பத்திரிக்கையாளராறை சந்தித்து பேசிய  அமலாபால், மலேசியாவில் பெண்களின் மேம்பாடு தொடர்பாக டான்சிங் தமிழச்சி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன்.

Amala Paul
Amala Paul

அதற்காக நான் தி.நகரில் உள்ள டான்ஸ் வகுப்பில் 3 நாட்களாக டான்ஸ்  பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அங்கு பாலியல் ரீதியாக அவர் என்னை  தொந்தரவு அளிக்கும் வகையில் என்னிடம் பேசினார்.

amala

மேலும் நடிகை அமலா பால், நான் மலேசியாவில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  டான்ஸ் ஆடபோவது  ஒருவர் மூலமாகதான் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் எதற்காக வாழ்கிறோம் என பேசினார். காவல்துறையில் இந்த விவகாரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் காவல் துறைக்கு நன்றி என கூறினார்.