நடிகை அமலாபால் திடீர் கைது! கோலிவுட்டில் பரபரப்பு!

நடிகை அமலாபால் போலி முகவரி கொடுத்து கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளவர் அமலாபால்.

amala-paul
amala-paul

இயக்குநர் விஜயுடன் திருமணம் நடைபெற்ற பிறகு விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் சினிமாத்துறையில் ஒரு ரவுண்ட் வர முயன்று கொண்டுள்ளார்.இதற்காக கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து வருகிறார் அமலாபால்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 4ம் தேதி, சென்னையில் அமலாபால் பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் வகை சொகுசு கார் வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.1.12 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

amala paul
amala paul

இந்த காரை ஆகஸ்ட் 9ம் தேதி புதுச்சேரியில் அமலாபால் பதிவு செய்துள்ளார். இதற்காக, திலாஸ்பேட் பகுதியில் செயின்ட் ரெர்சா’ஸ் தெரு என்ற முகவரியில் வீடு இருப்பதை போல போலி முகவரி கொடுத்து கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Amala Paul Stunning Photos (1)
Amala Paul Stunning Photos (1)

இந்த பென்ஸ் காரை கொச்சியிலுள்ள தனது வீட்டில் நிறுத்தி வைத்துள்ள அமலாபால் கேரளாவிலுள்ள நிகழ்ச்சிகளுக்கு அதை பயன்படுத்தி வருகிறார். ஆனால் அதில்தான் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

ஹவாலா மோசடி பேர்வழி ஒருவர் சமீபத்தில் புதுச்சேரி பதிவு எண் கொண்ட வாகனத்தில் சுற்றியதை கண்டுபிடித்த கேரள போலீசார், புதுச்சேரி பதிவு வாகனங்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றினர்.

amala paul
amala paul

கேரள போலீசாரின் தீவிர விசாரணையில் அமலாபால் காரும் சிக்கியுள்ளது. அவர் போலி முகவரி கொடுத்து சுமார் ரூ.20 லட்சம் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது.

1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த காரை, கேரளாவில் பதிவு செய்திருந்தால், அவர் சுமார் 20 லட்ச ரூபாய் வரி கட்டியிருக்க வேண்டுமாம். ஆனால், அதை புதுச்சேரியில் பதிவு செய்ததன் மூலம், சுமார் 1 லட்சம் மட்டுமே வாரியாக கட்டியுள்ளாராம் அமலா.

மேலும், பதிவு செய்வதற்காக போலி முகவரியை அவர் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அவர் கொடுத்த முகவரியில் உள்ள ஒரு கல்லூரி மாணவன் தனக்கு அமலா பால் குறித்தோ அவரது கார் குறித்தோ எந்த விவரமும் தெரியாது என கூறிவிட்டார்.

amala paul
amala paul

கேரள மோட்டார் வாகன சட்டப்படி கேரளாவில் வாகனத்தை பயன்படுத்தினால் ஓராண்டுக்குள் கேரள பதிவு எண்ணுக்கு அதை மாற்ற வேண்டும். காரின் மதிப்பில் 20 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும். வரி எய்ப்பு ஏய்ப்பு செய்யாததால்  இதையடுத்து அமலாபால் மீது குற்றப்பிரிவு போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

amala-paul
amala-paul

இதை அடுத்து  நடிகை அமலா பால் அவசரமாக முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை நாடினார் . இந்நிலையில் கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாபாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நேற்று மாலை குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அமலாபாலை கைது செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

amala paul
amala paul

சமீபத்தில் நஸ்ரியாவின் கணவரான பஹத் பாசில்  கைதாகி,  பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

More Cinema News: