Videos | வீடியோக்கள்
52 வயதில் அமலா வெளியிட்ட வீடியோ.. வாவ்! முரட்டுத்தனமா பண்றீங்களே மேடம்
80களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை அமலா. டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பிறகு தென் இந்திய மொழியில் ஒரு சரித்திர சாதனையை படைத்து விட்டார் என்று சொல்லலாம்.
அந்த அளவுக்கு பல படங்களில் மளமளவென நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அன்றைய சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் உடன் ஜோடி போட்டு அப்படியே தெலுங்கு பக்கம் சென்றவர் தான்.
பிரபல நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்து கொள்ள அங்கேயே செட்டிலாகிவிட்டார். அது மட்டுமல்லாமல் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கும் மாமியாரும் இவர்தான்.
இந்நிலையில் 52 வயது ஆகியும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வதில் எப்போதுமே ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் அமலா.
தற்போதைய இளைஞர்கள் தூக்கும் அளவுக்கு எடையை போட்டு பளு தூக்கும் அமலா வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
