Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை அமலா.. 28 வருடத்திற்கு பிறகு நடக்கும் சுவாரஸ்யம்
1986-ம் ஆண்டு டி.ஆர். ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா. அதன்பிறகு இவர் தொட்டதெல்லாம் ஜெயம்தான் என்பதை போல தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தன்னுடைய திறமையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். பிறகு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கைதி படத்தின் வெற்றிக்குப் பிறகு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் சர்வானந்த் மற்றும் ரிதுவர்மா நடிக்கும் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அமலா நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கும் இந்த படத்திற்கு ஜாக்ஸ் பீஜாய் இசையமைக்கிறார்.
அமலாபால் தமிழில் கடைசியாக 1991-ம் ஆண்டு வெளிவந்த கற்பூர முல்லை என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
