fbpx
Connect with us

Cinemapettai

காதலிக்கும் போது காதலரின் டேட்டூ.. கல்யாணத்துக்கு பிறகு யாருடைய டேட்டூ? சீரியல் நடிகையின் அட்டகாசம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காதலிக்கும் போது காதலரின் டேட்டூ.. கல்யாணத்துக்கு பிறகு யாருடைய டேட்டூ? சீரியல் நடிகையின் அட்டகாசம்

பிரபல தனியார் சேனலில் மிகவும் பிரபலமான சீரியல் ராஜா ராணி. இதில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா என்ற இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்தனர். இந்நிலையில் படப்பிடிப்பின்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. சில நாட்களுக்கு முன்பு இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் ஆலியா மானசா வின் கதையே வேறு. இவர் கலைஞர் டி.வி-யில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது பார்ட்னராக இருந்த மானஸ் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதல் ராஜா ராணி சீரியலில் நடிக்க ஆரம்பித்த போது கூட இருந்தது. அந்த காதலரின் அன்பால் தனது கையில் மானஸ் என டேட்டூ போட்டுக் கொண்டார்.

manas-alya

manas-alya

மானஸ் உடன் வெளியே சுற்றிய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டும் வந்தார். ஆனால் இவர்களது காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை. இதனால் இருவரும் பிரேக்கர் செய்து கொண்ட அவரவர்கள் வழியில் சென்று விட்டனர். ஆல்யா மானசா, ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் என்பவரை மீண்டும் காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

manasa-alya

manasa-alya

அதேபோல் மானஸ் என்பவரும் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் காதலில் இருப்பதாகவும், விரைவில் அவருடன் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போதைய காதல் கணவனுக்காக ஆலியா மானசா தன்னுடைய டேட்டூவை அழித்ததாக கூறப்படுகிறது.

என்ன இதெல்லாம்.. காதலிக்கிறது ஒருத்தர.. கல்யாணம் பண்றது ஒருத்தர.. சமூகம் கெட்டுப்போவதற்கு நீங்களும் ஒரு காரணம் தான்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top