இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், ஹிந்தி போன்ற வேறு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் தனுஷை வைத்து இயக்கும் வடசென்னை திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஹீரோயினாக அமலா பால் ஒப்பந்தமாகியிருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஐஷ்வர்யா ராஜேஷ், வடசென்னை படத்தில் குப்பத்து பெண்ணாக நடிக்கிறேன். ஏற்கனவே இது போன்ற கேரக்டரில் நடித்திருந்தாலும், இதில் வேறுமாதிரியான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். முக்கியமாக இந்த படத்தில் நடிகர் தனுஷூடன் நடிப்பதின் மூலம் என் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது என்றார்.

தனுஷூடன் வடசென்னை, விக்ரமுடன் துருவ நட்சத்திரம் என்று மிகப்பெரிய ஸ்டார் ஹீரோக்களுடன் ஐஷ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி வருகிறார். துருவநட்சத்திரம் படத்தில் விக்ரமுடன் நடிப்பது மட்டும் தான் தெரியும், என்ன கேரக்டர் என்று இயக்குநர் சொல்லவில்லை என்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.