Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-gossips

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

கோலிவுட்டில் நம்பர் 1 இடத்துக்கு ஆசை பட்டு அசிங்கப்பட்ட அக்கட தேசத்து நாயகி

அட ஆமாங்க இந்த செய்தி கோலிவுட்டில் மிகப்பெரிய ரவுண்ட் வருவோம் என எதிர்ப்பார்த்து ஏமாந்து போன இளம் நடிகை பற்றியது தான்.

நிதி அகர்வால் – இன்று டோலிவுட்டில் மோசட்  ஹீரோயின். சமூகவலை தளங்களில் இவரது போடோஸை பார்த்து ஜொள்ளு விட என பெரிய கூட்டம் உள்ளது.

நிதி மார்வாரி குடும்பத்தில் பிறந்தவர். ஹைதராபாதில் பிறந்த இவர் வளர்ந்தது பெங்களூரில். ஹிந்தி நான்றாக பேசும் இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளும் புரியுமாம். 2014 இல் யமஹா பாசினோ மிஸ் திவா போட்டியில் இறுதிவரை வந்தவர். 2017 இல் ஹிந்தியில் “முன்னா மைகேல்” படத்தின் வாயிலாக சினிமாவில் அறிமுகமானவர். பல ஸ்டைல் நடனத்தில் கை தேர்ந்தவர். தெலுங்கு சினிமாவில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இவரை நமது கோலிவுட் பட்சிகள் துரத்தி பிடித்து கமிட் செய்தனர். அதுவும் டாப் ஹீரோக்களின் படம் என்பதும் ஓகே சொல்லிவிட்டார் மனுஷி. ஜெயம் ரவியின் பூமி, சிலம்பரசனின் ஈஸ்வரன் என இரண்டுமே பொங்கல் முன்னிட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த 2021 இவர் தான் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலகப்போகிறார் என எதிர்ப்பதா இவருக்கு பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.

nidhi-agarwal

nidhi-agarwal

பூமி படத்தில் மிகவும் குறைந்த காட்சிகள் தான் நிதிக்கு. அதிலும் குறிப்பாக இரண்டாம் பாதியில் டி-ஷர்ட் போட்டு கொண்டு துணை நடிகை ரேஞ்சுக்கு ஜெயம் ரவியுடன் நிற்க விட்டு விட்டார் இயக்குனர் லக்ஷ்மணன். அடுத்ததாக ஈஸ்வரன் படத்தில், படம் நெடுக வருவது போன்ற ரோல் தான்; எனினும் இங்கும் பெரிதாக மனதில் நிற்பது போன்ற நடிப்பை வெளிப்படுத்த காட்சிகள் இல்லை. படம் முழுவதும் சிம்புவும், பாரதிராஜாவும் ஸ்கோர் செய்துவிட்டனர்.

str nidhi agarwal in eeswaran

ஆக மொத்தத்தில் ஜெயம் ரவி, சிம்பு படத்தை தொடர்ந்து தளபதி விஜய் படத்தில் கூட்டணி போடலாம் என கனவு கோட்டை கட்டிய நிதி அகர்வால் தான் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளாராம். அரசனை நம்பி புருஷனை கை விட்ட பழமொழிக்கு நல்ல உதாரணம் ஆகிவிட்டர் நிதி.

Continue Reading
To Top