காற்று வெளியிடை படத்திற்கு பிறகு தமிழிலும் அதிக வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த நடிகை அதிதி பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி நடித்த காற்று வெளியிடை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானது. மிகப்பெரும் ஹிட் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் படம் ரசிகர்களியடையே வரவேற்பை பெறவில்லை. தமிழின் பிரபல இயக்குநர் மணிரத்னம் என்பதால் அவர் படத்தில் நடித்தால் தமிழிலும் அதிகமாக வாய்ப்பு கிடைக்கும் என்று நடிகை எதிர்பார்த்திருந்த நிலையில் படம் சரியாக போகாததால் அதிதி பெரும் ஏமாற்றத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது.
கோலிவுட்டுக்கு என்று தனி மேனேஜர், சென்னையில் வீடு எடுத்து இருந்த நடிகை தற்போது மும்பைக்கே திரும்பியுள்ளார். வாய்ப்பு ஏதும் வராததால் நடிகை கடும் அப்செட்டில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.