இலியானா என ஒரு நடிகையிருக்கிறார் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும். கேடி, நண்பன் என இரு தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல படங்கள் நடித்த இவர் இப்போது மும்பையிலேயே செட்டிலாகி விட்டார்.

நடிகை அஜய் தேவ்கனுடன் இவர் பாத்ஷாஹோ படத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு காட்சியில் இவர் ஹீரோ முன் மேலாடையில்லாமல் நிற்பது போல நடித்திருக்கிறார். இதுபோன்ற காட்சிகளில் நான் நடித்தது இல்லை.

ஆனால் அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்கமாட்டேன் என சொன்னதில்லை. கதைக்கு தேவையானால் நடிப்பேன். பாத்ஷாஹோ படத்தில் மேலாடையில்லாமல் நடிக்க வேண்டும் என எனக்கு தோன்றியது.

காதலன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டத்தான் அப்படி ஒரு காட்சி. இயக்குனரிடம் இந்த ஐடியாவை சொல்லவே அவரும் ஓகே சொல்லிவிட்டார். அந்த காட்சியில் நடித்து முடித்ததும், அடுத்தவர் எனக்கு உடையை எடுத்து வரும் வரை அஜய் எனக்கு பாதுகாப்பு கொடுத்தார் என கூறுகிறார்.