சிம்பு, தனுஷ் உடன் ஜோடியாக நடித்த நடிகை ரிச்சா சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளார்.தனுசுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி படங்களில் நாயகியாக நடித்தவர் ரிச்சா கங்கோ பாத்யாயா.

மீனாவின் குடும்ப பாங்கான முகமும், நமீதாவின் கிளாமரான தோற்றமும் கலந்த கலவையாக இருந்த ரிச்சா தமிழ் ரசிகர்களுக்கு ரீச்சாகவே செய்தார். ஆனால், அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் போனது தான் ஆச்சர்யம். ஆகவே, தெலுங்கு திரையுலகத்துக்கு சென்றார்.

richa

தெலுங்கில் பிரபாஸ், ரவிதேஜா, நாகார்ஜுனா போன்ற முன்னனணி நாயகர்களின் படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வந்தார்.இதற்கிடையே ரிச்சா, திடீரென நடிப்பதை கை விட்டு; 4 வருடங்களுக்கு முன்பு எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றார்.

ஆனாலும் ரசிகர்கள் அவரை மறக்காமல் ட்விட்டரில் அவரை பின் தொடர்ந்து, மீண்டும் எப்போது நடிக்க வருவீர்கள்? என்று அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தனர்.

richa

தற்போது ரிச்சா படிப்பை முடித்து திரும்பியிருக்கிறார். ஆனால், ரசிகர்களின் கேள்விக்கு, இனி நிச்சயம் நடிக்க வரமாட்டேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

திரைப்படத்தில் இருந்து வெளியே வந்து 5 வருடங்கள் ஆனபிறகும், என்னுடைய அடுத்த படம் என்ன என்று கேட்பவர்களுக்கு இது தான் பதில்..! நான் வாழ்க்கையின் புதிய பகுதியில் இருக்கிறேன்.

richa

நடிப்புக்கு குட் பை. இனி நான், நடிக்க வரமாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்.

நடிப்புக்கு குட் பை சொன்னதால்; நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேனா? என்று பலர் கேட்பது வெறுப்பூட்டுகிறது. திருமணம் தவிர ஒரு பெண்ணுக்கு வேறு லட்சியங்கள் இருக்கக்கூடாதா? என்று ரிச்சா அதில் கூறி இருக்கிறார்.