சொல்லி வச்சமாதிரியே முட்டாளாக்கும் விஜய், அஜித்.. மீண்டும் பற்ற வைத்த ரஜினி

Actors Vijay and Ajith make fools of fans: தமிழ் சினிமாவின் முன்னணி ஆளுமைகளான ரஜினி, கமல், விஜய், அஜித் இவர்கள் அனைவரும் வரிசையாக பல பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் கமிட் ஆகி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் யாரு, நம்பர் ஒன் நடிகர் யாரு, என் தலைவர் தான் கெத்து என பல சண்டை சச்சரவுகளுடன் ரசிகர்கள் தமிழ்நாட்டை ரணகளப்படுத்தி வருகின்றனர்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடிப்புக்கு கொஞ்சம் லீவு விட்டு அரசியலில் தீவிரம் செலுத்தி வருகிறார் கமல்.

வெங்கட் பிரபுவின் கோட் திரைப்படத்தில் கமிட் ஆகி உள்ள தளபதியோ, இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

விடாமுயற்சியில் நடித்து வந்த அஜித்தோ பல்வேறு காரணங்களால் விடாமுயற்சிக்கு விடுமுறை கொடுத்து ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லியில் கமிட் ஆகி உள்ளார்.

குட் பேட் அக்லிக்கு பின் இரண்டு வருடம் சினிமாவை விட்டு விலகும் அஜித்

இந்நிலையில் அஜித்தின் உடல் நிலையில் ஏற்பட்ட தொய்வால் நடிப்பை விட்டு சற்று விலகி மத்திய பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் தனது சகாக்களுடன் பைக் டூர் சென்று இருக்கிறார்.

ஒப்புக்கொண்ட குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு  மூளையில் ஏற்பட்ட நரம்பு பிரச்சனைக்கு சிகிச்சை மேற்கொண்டு இரண்டு வருடம் ஓய்வெடுக்க போகிறாராம் அஜித்.

இவருக்கு போட்டியாக உள்ள தளபதியோ ஹச் வினோத்துடன்  கடைசியாக ஒருபடம் பண்ணிவிட்டு இரண்டு வருடங்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தப் போகிறாராம்.

அரசியலில் தனக்கு கிடைக்கும் வெற்றியை பொறுத்தே அடுத்ததாக சினிமாவில் தொடர்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய உள்ளாராம் விஜய்.

இவை என்னவோ அஜித் மற்றும் விஜய் இருவரும் சொல்லி வைத்து நம்மை முட்டாள் ஆக்குவது போல் இருக்கிறது என்று இவரது ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னணி நடிகர்கள் அனைவரும் கலண்டு கொள்ள தனிக்காட்டு ராஜாவாக, தனது படங்களில் மூலம் சொல்லி அடிக்க வருகிறார் தலைவர். 

வரிசையாக வேட்டையன், லோகேஷ் கனகராஜ் உடன் தலைவர் 171, ஜெயிலர் 2 என கைவசம் பல படங்கள் உள்ளன. இனி இரண்டு வருடத்திற்கு தலைவர் காட்டில் அடை மழை தான்..!

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →