திறமை இருந்தும் வளராத 7 நடிகர்கள்.. இந்த ஒரு வாரிசு நடிகருக்கும் லக் இல்லை

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகர்கள் ஏதோ சில காரணத்தினால் திடீரென காணாமல் போய்விடுவார்கள். அந்த வரிசையில் பல வெற்றிப்படங்களை கொடுத்து காணாமல்போன நடிகர்களை பார்க்கலாம்.

மைக் மோகன்: நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல்கள், தென்றல் எண்ணை தொடும், மௌனராகம், சுட்டபழம், பிள்ளைநிலா, இளமைக்காலங்கள், கோபுரங்கள் சாய்வதில்லை, நூறாவது நாள், உதய கீதம் என பல சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்தவர்தான் மைக் மோகன். இவருடைய படங்களில் பெரும்பாலும் இளையராஜாதான் இசை அமைத்திருப்பார். மோகன் பட பாடல்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கும். 1999 இல் இவர் நடித்து, இயக்கி, தயாரித்த, படம் அன்புள்ள காதலுக்கு. இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இப்படத்திற்கு பிறகு மோகனுக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை. இதனால் டிவி சீரியல்களை தயாரித்து வருகிறார்.

mike-mohan
mike-mohan

பிரஷாந்த்: பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான தியாகராஜனின் மகன் பிரசாந்த். 90களில் அறிமுகமான பிரஷாந்த் வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, ஜீன்ஸ், ஜோடி, வின்னர், பூமகள் ஊர்வலம், பார்த்தேன் ரசித்தேன், திருடா திருடி என பல வெற்றிப்படங்களை தந்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா உடன் இணைந்து இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் பிரஷாந்த். இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. 1996 இற்குப் பிறகு குடும்ப பிரச்சனையால் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பெரிய இடைவெளிக்குப் பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.

prashanth
prashanth

அப்பாஸ்: காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ் பெண் ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர். அதன்பின் விஐபி, மின்னலே, பூச்சூடவா, பூவேலி, படையப்பா, சுயம்வரம், திருட்டுப்பயலே ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்திற்கு பிறகு அப்பாஸ்க்கு சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அதன்பின் அவர் குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார். அங்கு ஒரு முன்னணி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்பாஸ் கடைசியாக ராமானுஜம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

abbas-cinemapettai
abbas-cinemapettai

 

கரண்: கரண் தன்னுடைய ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் அண்ணாமலை படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன்பின்பு வில்லன் மற்றும் துணை நடிகருக்கான கதாபாத்திரங்களில் நடித்து தனது அற்புதமான நடிப்பால் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார். 2006 இல் வெளியான கொ. ..க்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கரண் கதாநாயகனாக நடித்த கருப்பசாமி குத்தகைக்காரர் படம் வெற்றி பெற்றது. சிறுவயது முதலே நடிக்க தொடங்கிய கதாநாயகன் அளவுக்கு வளர்ந்தாலும் சில தனிப்பட்ட பிரச்சனையால் பட வாய்ப்புகளை இழந்தார் கரண்.

karan
karan

ஷாம்: தமிழ் சினிமாவில் 12பி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷாம். இவர் நடித்த லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே போன்ற படங்கள் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இவர் நிறைய படங்கள் நடித்து அந்த ஷாமுக்கு திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. தற்போது சில படங்கள் நடித்திருந்தாலும் பேசும்படி அப்படங்கள் ஓடவில்லை. ஷாம் தற்போது சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

shaam
shaam

நரேன்: 2006 இல் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் நரேன். இதைத்தொடர்ந்து நெஞ்சிருக்கும்வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே என பல வெற்றிப்படங்களை தந்துள்ளார். நரேன் தான் நடிக்கும் படங்களில் வித்தியாசத்தை காட்டி, தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அஞ்சாதே படத்திற்கு பிறகு தமிழில் இவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் மலையாள படங்கள் கவனம் செலுத்தி வந்தார். கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

Narain

ஸ்ரீகாந்த்: ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பரிச்சயமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதத்தில், கனாக்கண்டேன் போன்ற நல்ல படங்கள் இவருக்கு அமைந்தது. அதற்குப் பின் ஸ்ரீகாந்த் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தது. ஷங்கர் இயக்கத்தில் 2012-ல் வெளியான நண்பன் திரைப்படத்தில் விஜய் தோழனாக ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய வெங்கட் கதாபாத்திரம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. கடைசியாக ஸ்ரீகாந்த் நடித்த சவுகார்பேட்டை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

srikanth
srikanth
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்