Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal haasan jayam ravi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நல்ல கதைக்காக இமேஜை தூக்கி எறிந்த 5 நடிகர்கள்.. அதுலயும் நான்காவதாக இருக்கும் நடிகர் ரொம்ப மோசம்

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல நடிகர்கள் எப்படியாவது சினிமாவில் தனக்கென இடம் பிடித்து விட வேண்டும் என்ற நம்பிக்கையில் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு நடிப்பார்கள்.

அப்படி ஒரு சில நடிகர்கள் தங்களது சினிமா வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கக் கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதற்கு தங்களது இமேஜ்களை தவிர்த்து சில கதா பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்ன கதாபாத்திரம் என்பதை பார்ப்போம்.

கமல்ஹாசன்: கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே காலத்திற்கும் பேசக்கூடிய படங்களாகவே அமைந்திருக்கும். ஏனென்றால் வித்தியாசமான கதாபாத்திரம் அனைத்துமே ரசிகர்களை கவர கூடிய கதாபாத்திரமாக தான் அமைந்திருக்கும். ஆனால் கமல்ஹாசன் குணா படத்தில் விபச்சாரியின் மகனாக நடித்திருப்பார். இப்படம் ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி: ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இருப்பது பேராண்மை. இப்படத்தில் படத்தின் கதாபாத்திரத்திற்காக ஜெயம் ரவி கோமணத்துடன் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.

ஆர்யா: பாலா படத்தில் நடிப்பதற்கு பல நடிகர்களும் தவமாய் தவமிருந்து காத்திருப்பார்கள். அப்படி ஆர்யாவிற்கு காத்திருந்து வாய்ப்பு கிடைத்தது தான் நான் கடவுள். இப்படத்தில் ஆர்யா கோமணத்துடன் நடித்திருப்பார்.

விஜய் சேதுபதி: தமிழ் சினிமாவில் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று நடிப்பவர் தான் விஜய் சேதுபதி. அப்படி ஒரு விசித்திரமான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். அதாவது சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்திருப்பார்.

SUPER DELUXE

அப்போது போலீஸ்காரர் ஒருவர் சுய இன்பத்திற்கு கட்டாய படுத்துவார். வேறுவழியின்றி விஜய் சேதுபதியின் சுய இன்பத்தை செய்வது போல் படத்தில் நடித்திருப்பார். விஜய் சேதுபதி மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் இமேஜை பார்க்காமல் இந்த காட்சியில் நடித்திருப்பார்.

அர்ஜுன்: முதல்வன் படத்தில் ஆடை இல்லாமல் சாக்கடையிலிருந்து எழுந்து வந்து நடித்திருப்பார்.

Continue Reading
To Top