தந்தை பிரபல நடிகராக இருந்தும்.. திரையில் ஜொலிக்க முடியாமல் போன 5 வாரிசு நடிகர்கள்

அரசியலில் எப்படி வாரிசு அரசியல் உள்ளதோ அதேபோல் சினிமாவில் வாரிசு நடிகர்கள் உள்ளனர். தந்தை பெரிய நடிகர் என்றால் அவரின் புகழை வைத்து மகனும் அப்படியே திரையில் நடிகராக களமிறங்கி விடுவார். அப்படி தமிழ் சினிமாவில் நுழைந்த வெற்றி பெற்ற ஏராளமான வாரிசு நடிகர்கள் உள்ளனர்.

ஆனால் அனைத்து வாரிசு நடிகர்களும் வெற்றி பெறுவதில்லை. தந்தை மிகப்பெரிய நடிகராக இருந்தும் தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போன சில வாரிசு நடிகர்கள் பற்றி தான் தற்போது நாம் பார்க்க போகிறோம்.

சக்தி – தமிழ் சினிமாவில் சந்திரமுகி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பி.வாசுவின் மகன் தான் சக்தி. இவர் சின்னத்தம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொட்டால் பூ மலரும் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தும் இவரால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. அதிக குடிப்பழக்கமே இவரின் இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஆனந்த் பாபு – பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் தான் ஆனந்த் பாபு. அவரது தந்தை நாகேஷிற்கு கிடைத்த பெயர் புகழில் கால்பங்கு கூட ஆன்ந்த் பாபுவிற்கு கிடைக்கவில்லை. பல படங்களில் துணை நடிகராகவே நடித்துள்ளார். குடிக்கு அடிமையாகும் அளவிற்கு ஆனந்த் பாபு குடித்தே அவரின் வாழ்க்கையை தொலைத்து விட்டாராம்.

மனோஜ் – இயக்குனர் சிகரம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் தாஜ்மஹால் படம் மூலம் ஒரு நல்ல வெற்றியை கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இறுதிமாக மாநாடு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரும் குடிப்பழக்கம் காரணமாக அவர் கெரியரை கெடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

கெளதம் – தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கெளதம் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஒரு நல்ல அறிமுகம் தான் ஆனால் கெளதம் தொடர்ந்து அடல்ட் படங்களிலும் சாதி ரீதியான படங்களிலும் நடித்து வந்ததால் அவருக்கான மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது.

ஹம்ஷவர்தன் – பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகனான ஹம்ஷவர்தன் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதில் குறிப்பிட்டு கூறினால் புன்னகை தேசம் படம் தான் இவருக்கு நல்ல படமாக அமைந்தது. அதிலும் இவர் துணை நடிகர் தான். இவர் சரியான கதைகளை தேர்வு செய்யாமல் நடித்ததே இவரது தோல்விக்கு காரணம். சரியான கதைகளை தேர்வு செய்து நடித்திருந்தால் இவரும் பிரபல நடிகராக ஜெயித்திருப்பார்.

என்னதான் இவர்களின் தந்தை சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தாலும் இவர்களால் அந்த இடத்தை அடைய முடியவில்லை. காரணம் திறமையும் உழைப்பும் இல்லாமல் யாராலும் புகழ் பெற முடியாது என்பது தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்