fbpx
Connect with us

Cinemapettai

நடிகர்கள் எல்லாம் வானத்தில் இருந்தா வந்தாங்க.. சம்பளத்தை குறைக்கனும்.. பிரபல தயாரிப்பாளர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகர்கள் எல்லாம் வானத்தில் இருந்தா வந்தாங்க.. சம்பளத்தை குறைக்கனும்.. பிரபல தயாரிப்பாளர்

பிரபுராஜா இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘படைப்பாளன்.’ இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு தயாரிப்பாளர் சங்க கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது,

“ நடிகர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் இதற்கு ஒரு முடிவு எடுத்து நடிகர்கள் சம்பளத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அவசியம் அப்படி நடிகர்கள் ஒத்து வராவிட்டால் வேறு நடிகரை வைத்து படம் எடுக்க வேண்டும். இங்கு எல்லா நடிகர்களும் வானத்தில் இருந்தா வந்தார்கள்? திரைப்படங்களில் தமிழர்களுக்கு மட்டும் வேலை கொடுங்கள்” இவ்வாறு கூறினார்.

திருநாவுக்கரசர் எம்பி பேசுகையில், ஒரு படம் வெற்றி பெற கதைதான் மிகமுக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். எம்.ஜி.ஆருக்கு கூட படங்கள் தோற்றுள்ளன. சினிமா மிகவும் கஷ்டத்தில் உள்ளது. சினிமா என்பதே பிரசவ வலி மாதிரி தான்.

பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்தால் சினிமா இன்னும் சுகாதாரமாக இருக்கும். சினிமா நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top