sivakarthikeyan rajini
sivakarthikeyan rajini

காவிரி பிரச்னையை தீர்க்க பலரும் போராட்டம் நடத்தி கொண்டிருக்கையில் நம்ம சினிமா துறையினரும் கடமைக்கு வேற வலி இல்லாமல் ஒரு அமைதி போராட்டம் என்ற பெயரில் மௌன போராட்டம் நடத்தினர்.

போராட்டம் ஆரம்பித்த சிறுது நேரத்திலேயே விஜய் நேரம் தவறாமல் வந்துட்டார். அதன்பின் ரஜினி கமல் விக்ரம் சூர்யா சிவகர்த்திகேயன் தனுஷ் என அனைவரும் காலந்து கொண்டனர்.

ரஜினி வந்த உடனே சிவகார்த்திகேயன், ரஜினி அருகில் அமர்ந்து கொண்டார், விஜய் சிவகார்த்திகேயன் அருகில் அமர்ந்து கொண்டார். அப்பொழுது சிவகார்த்திகேயன் விஜயிடம் நீங்க வந்து ரஜினி அருகில் வந்து அமருங்கள் என கேட்டு கொண்டுள்ளார் ஆனால் விஜய் பரவாயில்லை என மறுத்துள்ளார். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை ஆனால் இதனை வைத்து அரசியல் விளையாட்டை விளையாட சமூக வலையதலங்களில் ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது.

ஆனால் சிவகார்த்திகேயன் இது மட்டுமா பண்ணினார். ரஜினி காலில் படார் என விழுந்தார். தனுஷை இழுத்து அருகில் வாருங்கள் என அணைத்தார். அவர்களுக்குள் உள்ள சண்டையே மறந்து போய்விட்டது.