fbpx
Connect with us

மிகவும் ட்ரெண்ட்டான வசனங்கள்! யாருடைய பஞ்ச் அதிக வரவேற்பை பெற்றது!

tamil-actors-punch-dialogues

News / செய்திகள்

மிகவும் ட்ரெண்ட்டான வசனங்கள்! யாருடைய பஞ்ச் அதிக வரவேற்பை பெற்றது!

கோலிவுட்டில் வருடத்திற்கு 200 படங்கள் இறங்குகிறது. இதில் நாம் விரும்பும் நடிகர் தரமான படம் என 25 படங்களை நியாபகம் வைத்திருந்தாலே அதிகம் தான். அந்த வகையில் நமக்கு உடனே நியாபகம் வரும் விஷயம் அந்த படத்தில் இடம்பெற்ற பேமஸ் வசனங்கள் தான், அதன் தொகுப்பை பார்ப்போம்.

ஏன்னா நீ என் நண்பன்
நேற்று, இன்று, நாளை என என்றுமே நண்பர்களின் பேமஸ் படம் தளபதி. இதில் பல வசனங்கள் பேமஸ், அதில் மிகவும் பிரபலம் மம்முட்டி ரஜினியிடம் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வியா என்று கேட்க, ஆமாம், ‘ஏன்னா நீ என் நண்பன்’ என்று சொல்லும் வசனம் இன்றும் பிரபலம். அதேபோல் இந்த படத்தில் வரும் ‘நிறுத்தனும் எல்லாத்தையும் நிறுத்தனம்’ வசனமும் மிக பேமஸ்.

போங்கடா போய் புள்ள குட்டிய படிக்க வைங்கடா
தேவர் மகன் முழுப்படத்திற்கான நோக்கமும் இந்த ஒரு வரியில் தான் இருக்கும். அருவாள் கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்று கமல் நினைத்தாலும், கடைசியில் அவர் கையில் அருவாள் எடுக்கும் நிலைமை வந்து நாசரை வெட்டி இந்த வசனத்தை சொல்வார். அதேபோல் ‘உனக்குள்ள முழிச்சுகிட்டு இருக்க, அதே மிருகம் தான் எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கு’ வசனமும் பேமஸ்.

நீங்க நல்லவரா கெட்டவரா
எவர் க்ரீன் என்று சொல்லப்படும் வசனம் இது. எந்த காலக்கட்டத்திற்கும் பொருந்தக்கூடிய வசனம், நாயகன் படத்தில் கமலின் பேரன் அவரிடம் கேட்கும் வசனம். இதை வைத்து இன்றும் பல மிமி உருவாகின்றது. (இதுபோன்ற பல கிளாஸிக் வசனங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் இருப்பதற்கு விவேக் தான் காரணம் என்றால் மிகையாகாது).

சத்ரியனுக்கு சாவே கிடையாதுடா
விஜயகாந்த் என்றாலே அனல் பறக்கும் வசனம் தான் வரும் அவரிடமிருந்து. ஆனால், அவரே மிகவும் அமைதியாக மிரட்டிய படம் தான் சத்ரியன், இதில் வரும் சத்ரியனுக்கு சாவே கிடையாதுடா வசனம் மிகவும் பிரபலம். அதே நேரத்தில் ‘சாதாரண மனுஷனுக்கு தான் ஷாக் அடிக்கும், இது நரசிம்மா, என்ன தொட்ட கரண்ட்டுக்கே ஷாக் அடிக்கும்’ போன்ற வசனமெல்லாம் மிமி மெட்ரியல் தான்.

என்ன கொடுமை சரவணன் இது
ஒரு மனுஷன் அவ்ளோ எமோஷனலா பேசுனத, இப்படியா வச்சு செய்வீங்க என்ற ரேஞ்சில் தான் இந்த வசனம் இருக்கும். தன் மனைவியின் நிலையை கண்டு பிரபு உருகி பேசும் இந்த வசனத்தை இளைஞர்கள் இன்று வரை கலாய்த்து வருகின்றனர்.

ஐயம் வெயிட்டிங்
தளபதி ஒரு படத்தில் தான் சொன்னார், அதை வைத்து 100 படத்தில் இந்த வசனம் ட்ரெண்ட் அடித்து விட்டது. வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன் என்பதை கூட ஸ்டைலாக சொல்ல வைத்த பெருமை தளபதிக்கே.

நண்பேன்டா
தளபதி படத்தின் வசனத்தை இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் சந்தானம் பேசியது தான் ‘நண்பேன்டா’ டயலாக், இந்த வசனமும் இதை தொடர்ந்து பல படங்களில் உலா வந்தது.
தெறிக்க விடலாமா

தெறிக்க விடலாமா என தல வேதாளம் டீசரில் சொன்னார். படம் மட்டுமில்லை அதை தொடர்ந்து தெறி என்று இளைய தளபதி தன் அடுத்த படத்திற்கு டைட்டிலே வைத்துவிட்டார்.

என்ன குமாரு பயந்துட்டியா
எப்போதும் ஹீரோ பேசும் வசனம் தான் பேமஸ் ஆகும். ஆனால், ஹீரோவின் அடியாள் பேசும் வசனத்தை கூட பேமஸ் ஆக்க செல்வராகவனால் மட்டுமே முடியும். புதுப்பேட்டை படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் இன்றைய இளைஞர்கள் பலரும் வேலையில் பின் வாங்கும் விஷயத்திற்கு உடனே ஜாலியாக கூறும் டயலாக் இதுதான்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top