தமிழகத்தில் நடிகர்கள் என்றால் அவர்கள், மிகவும் திறமையானவர்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள்.

உண்மைக்காவும், மக்களின் நலனுக்காகவும், பாடுபடுபவர்கள் என்பது தமிழக மக்களின் நம்பிக்கை,

சினிமாவில் இருந்து வந்தவர்தான் அண்ணா, கருணாநிதி, இவர்கள் இருவரும் திரைப்படத்திற்கு கதை,வசனம் எழுதி மக்களை கவர்ந்தனர். இவர்களுக்கும் தமிழக மக்கள்  முதலமைச்சர் பதவி தந்தனர்.

இதனால்தான், நடிகர் எம்.ஜி.ஆரை புரட்சி தலைவராகவும், அவர் உயிருடன் இருக்கும் வரை முதலமைச்சராகவும் கொண்டு வந்து அழகு பார்த்தனர்.

பின்னர் நடிகை ஜெயலலிதாவை முதல்வராக்கினர். நடிகர் விஜயகாந்தை எதிர் கட்சி தலைவராக்கினர்.

தமிழக மக்களால் சினிமா வேறு, நிஜவாழ்க்கை வேறு என்று பிரித்துப் பார்க்க தெரியாதவர்கள்.

அது அந்த காலம் இப்போது, நிழல் வேண்டாம் நிஜம் வேண்டும் என்று கூற துவங்கியுள்ளனர்.

இனதால்தான் நடிகர் கமல் நாட்டில் நடக்கும் எந்த பிரச்னையானாலும் தனது டுவிட்டரில் கருத்துகளை டுவிட் செய்கிறார். இளைஞர்கள் மத்தியில் அது வரவேற்பை பெற்றுள்ளது.

ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல உதவிகளை செய்தார்.

இவ்வாறு பெரிதும் மதிக்கப்படும் நடிகர்கள் செய்த காரியம் இருக்கே,  அது மிகவும் கேவலமானது என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

நடிகர் சங்கம் அந்த செயல்தான் என்ன இதோ விவரிக்கிறார் வக்கீல் ஸ்ரீரங்கன்

சென்னை அபிபுல்லா சாலையில்  நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடம் மொத்தம் 14 கிரவுண்ட்தான் உள்ளது. ஆனால், தற்போது அவர்கள் 18 கிரவுண்டு இடத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதே இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அபிபுல்லா சாலையையும், அதற்கு பின்னால் இருக்கும் பிரகாசம் சாலையையும் இணைக்கும் விதமாக 33 அடி அகலம் கொண்ட சாலை இருந்தது. இந்த சாலை சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சங்கத்தினரின் பயன்பாட்டுக்கு வந்தது.

காலப்போக்கில் நடிகர் சங்க வளாகத்தின் இரண்டு நுழைவாயில் களையும் ஆக்கிரமித்து அதை முழுக்க அவர்கள் உபயோகிக்கும் பகுதியாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டனர்.

இதுகுறித்து இதற்கு முன் இருந்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். எந்த பயனும் இல்லை.

தற்போது புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்று கட்டிட பணிகளை தொடங்க இருக்கும் நாசர் தலைமையிலான நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அதற்கு அவர்கள், ‘எங்களிடம் பட்டா இருக்கிறது’ என்றனர்.

மக்கள் பயன்படுத்தி வந்த சாலைப் பகுதிக்கு பட்டா வாங்கியிருப்பதாக கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதோடு,

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முறையான அனுமதி சான்றிதழ் இல்லாமலேயே புதிய கட்டிடத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது.

இவற்றையெல்லாம் சட்டப்படி அணுக வேண்டும் என்ற நோக்கத்தில் உரிய ஆதாரங்களுடன் எங்கள் குடியிருப்புவாசிகள் சார்பில் சென்னை ரிப்பன் கட்டிடத்தில் உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸில் மனு கொடுத்துள்ளோம். தற்போது எங்கள் மனு மீதான விசாரணை தொடங்கியுள்ளது என்றார் அவர்.