தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பிறந்தநாள் என்றால் போதும் ரசிகர்களின் கொண்டாட்டம் வேறலெவலில் இருக்கும். அதே சமயம் நடிகர்களும் தங்களது பிறந்தநாள் அன்று அப்போது நடித்துவரும் படத்துக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை வெளியிடுவார்கள்.

சரி இவ்வருடம் வந்த நடிகர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக என்னென்ன வந்தது என்பதை பார்ப்போம்.

அஜித்

தலயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக விவேகம் பட டீஸர் வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக படக்குழு புதுப் போஸ்டர் ஒன்றை மட்டும் வெளியிட்டிருந்தனர்.

அதிகம் படித்தவை:  வெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி பட செகண்ட் லுக் போஸ்டர்.

விஜய்

அட்லீயுடன் இரண்டாவது முறையாக விஜய் கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். ஜுன் 22 விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது.

விக்ரம்

விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவ்வளவாக எந்த ஒரு பட தகவலும் வெளியானதில்லை. ஆனால் இவ்வருடம் அதாவது ஏப்ரல் 17ம் தேதி இவர் நடித்துவரும் ஸ்கெட்ச் படத்தின் ஒரு பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகி இருந்தது.

அதிகம் படித்தவை:  எஸ்.ஜே.சூர்யா,தனுஷிற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதற்கு இதான் காரணம்!

தனுஷ்

தன்னுடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜுலை 28ம் தேதி வேலையில்லா பட்டதாரி 2 படம் வெளியாக இருப்பதாக அவரே கூறியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன்

கடந்த வருடம் தன்னுடைய பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் ரெமோ பட டைட்டிலை வெளியிட்டிருந்தார். இவ்வருடம் வேலைக்காரன் என்று மோகன் ராஜா பட டைட்டிலை வெளியிட்டிருந்தார்.

விஷால்

இரும்புத்திரை என்ற படத்தில் நடித்துவரும் விஷால், இப்படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று கூறியிருந்தார். அன்று தான் அவருடைய பிறந்தநாளும்.