Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல சீரியல் நடிகை ஆலியா மானசாவுக்கு பிறந்த பெண் குழந்தை.. பிஞ்சுக் கையை ஏந்தி புத்துணர்ச்சியாக்கிய புகைப்படம்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் தமிழக தாய்மார்கள் மனதில் குடியேறியவர் ஆலியா மானசா.
ஆலியா சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான மானாட மயிலாட நடனப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அவருக்கு ஜோடியாக இருந்தவர்தான் மானஸ். நடன இயக்குனராக தற்போது பணியாற்றி வரும் மானஸ் ஆலியாவை மானாட மயிலாட நிகழ்ச்சியில் இருந்து காதலித்து வந்துள்ளார். இருவரும் பார்க் பீச் என சுற்றி வந்தனர்.
இந்நிலையில் திடீரென இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கிடையில் ஆலியா ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் கர்ப்பமாக இருந்த ஆல்யா மானசா தற்போது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
அந்த அழகிய பிஞ்சு குழந்தையின் கைகளை பெற்றோர்களாகிய ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தங்களுடைய கைகளில் ஏந்தியவாறு வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய வைத்துள்ளது.

alya-sanjeev-daughter
