தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் தாடி பாலாஜி.

சமீபத்தில் இவரது மனைவி நித்யா, சாதி பெயரை சொல்லி தாடி பாலாஜி அடித்து துன்புறுத்துவதாக மாதவரம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இவரை சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

மற்றவர்களின் பேச்சை கேட்டு தன் மீது நித்யா பழிசுமத்துவதாகவும், மனைவிக்காக சிறைக்கு கூட செல்லத் தயார் எனவும் தாடி பாலாஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் நித்யா பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், தான் ஏற்கனவே அளித்த புகாருக்கு இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாவும், பல பேருடன் தொடர்புபடுத்தி பேசி சித்ரவதை செய்ததாகவும் கூறியுள்ளார்.