Tamil Cinema News | சினிமா செய்திகள்
உருவ கேலி, பட்டினிக்கு ஆளான யோகி பாபு.. உழைப்பால் உயர்ந்த கதை தெரியுமா?
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஒதுக்கப்பட்ட யோகி பாபு, தற்போது யோகி பாபு இல்லாமல் படமே இல்லை என்ற அளவுக்கு உயர்ந்துள்ளார். அதற்குக் காரணம் அவர் கடந்த காலத்தில் சந்தித்த பசி, பட்டினி மற்றும் அவமானங்களே.
அவர் சினிமாவில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த காலத்தில் பெரிதும் உருவ கேலிக்கு ஆளானார். அதுமட்டுமல்லாமல் இவர் சாலையில் நடந்து செல்லும் போது குழந்தைகள் மற்றும் பெண்கள் இவரை கண்டு பயந்து ஒதுங்கி சென்றதாகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.
தான் இப்படி அசிங்கமாக பிறந்து விட்டதாக எண்ணி பலமுறை தனிமையில் அழுதுள்ளாராம். பிறகு நண்பரின் நகைச்சுவை நிகழ்ச்சி படப்பிடிப்புக்கு செல்லும் போது எதேச்சையாக அங்கு உள்ள இயக்குனரின் கண்ணில் பட்டு விட்டார்.
பார்த்தவுடனே சிரிக்கும் போல் தோன்றும் யோகி பாபுவை தன்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன்பிறகு அவரை மக்கள் ரசித்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். மான் கராத்தே படத்தில் பன்னி வாயான் என்ற கேரக்டர் இவரை உச்சத்தில் ஏற்றியது.
அதன்பிறகு கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து முன்னணி நடிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார். இவர் இல்லாமல் நாங்கள் படம் நடிக்கப்போவதில்லை என்று கூறும் அளவுக்கு அனைவரிடமும் நல்ல முறையில் பழக்கம் வைத்துள்ளார்.
தன்னை ஏற்றிவிட்டவர்களை மதிக்கும் குணம் இருப்பதால் தான் இன்று இரவு பகலாக நடிக்கும் அளவுக்கு பிஸியாக உள்ளார். மேலும் கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டாலே பந்தா காட்டும் இந்த சினிமா உலகத்தில், எதார்த்தமாக இருந்து தயாரிப்பாளர்களின் தங்க மகனாகவும் விளங்குகிறார்.
உழைச்சு முன்னுக்கு வந்தாலே தனி கெத்து தான சார்!
