Connect with us

Cinemapettai

தனது பலவீனத்தை வெளிப்படையாக கூறிய கே.ஜி.எப்-2 யாசின்.. புகைப்படம் உள்ளே

yash-kgf

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனது பலவீனத்தை வெளிப்படையாக கூறிய கே.ஜி.எப்-2 யாசின்.. புகைப்படம் உள்ளே

கேஜிஎஃப் என்ற படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றவர் நடிகர் யாஷ். அதுவரை கன்னட மொழியில் மட்டும் வெகு பிரபலமாக இருந்த இவர் அதன்பிறகு நாடெங்கும் பிரபலமாக அறியப்பட்டார். துளியும் தொய்வில்லாத திரைக்கதையில் உருவாகியிருந்த கேஜிஎப் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

டான் பின்னணியில் உருவாகி இருந்த இந்த கதை வித்தியாசமாக இருந்ததால் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதற்கு அனைத்து மொழிகளிலும் பயங்கர எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் நடிகர் யாஷ் தன்னுடைய பலம் மற்றும் பலவீனத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதனைக் கண்டு அவரது ரசிகர்கள் இவ்வளவு அழகான பலவீனம் எல்லோருக்கும் வேண்டும் என பதிவு செய்து வருகின்றனர்.

அவர் தன்னுடைய மகளை தான் தனக்கான பலவீனம் என கூறியிருந்தார். நடிகர் யாஷ் தன்னுடன் நடித்த ராதிகா பண்டிட் என்பவரை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு ஐரா என்ற மகள் பிறந்தார். அவரே தனது பலமாகவும், பலவீனமாகவும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தன் செல்ல மகளுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம் இணையதளத்தில் படுவைரலாகி வருகிறது. இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு மகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

yash

yash

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top