கேஜிஎஃப்-3 உருவாகுமா யாஷ்.? ஓப்பனாக பதிலளித்த ராக்கி பாய்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கேஜிஎப் 2 திரைப்படம் தற்போது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. ஏற்கனவே இதன் முதல் பாகம் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. தற்போது இந்த படமும் பல மடங்கு வசூலை பார்த்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளிவருமா என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உள்ளது. ஏனென்றால் தற்போது வெளியாகியிருக்கும் கேஜிஎப் 2 படத்தின் இறுதியில் மூன்றாம் பாகம் பற்றிய நாசுக்கான தகவல்கள் இருக்கிறது. அதனால் இப்போது ரசிகர்கள் அதை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

மேலும் படத்தின் நாயகன் யாஷிடமும் அவர்கள் இது குறித்து கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில் யாஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார். அதாவது நானும், இயக்குனரும் இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்து நிறைய பேசியிருக்கிறோம்.

இந்த இரண்டாம் பாகத்தில் நாங்கள் சொல்ல முடியாமல் விட்ட நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதை அடுத்த பாகத்திற்கு கொண்டு செல்லவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதனால் அடுத்த பாகத்தை ரசிகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் மக்கள் விரும்பினால் அடுத்த பாகத்தை தருவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதோடு இந்தப் படமும் நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. அதனால் அடுத்த பாகத்தை தொடங்குவதற்கு நிறைய சாத்தியங்கள் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து படத்தின் இயக்குனரும் இது பற்றிய ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பும், தயாரிப்பாளர் யார் என்பதை பற்றிய செய்தியும் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் கேஜிஎப் 3 உருவாகும் பட்சத்தில் படத்தில் நாம் எதிர்பார்க்காத பல சர்ப்ரைஸ்கள் இருக்கும் என்ற ஒரு தகவலும் வெளிவந்துள்ளது.

Next Story

- Advertisement -