Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி
ஹீரோயினுக்கான அத்தனை அம்சமும் கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கு திடீரென கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் வாரிசு நடிகர் ஒருவரின் வில்லத்தனத்தால் அந்த வாய்ப்பே அவருக்கு மறுக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் அந்த நடிகை குறிப்பிட்ட சில வருடங்களில் தன்னை யார் என்று நிரூபித்து இருக்கிறார்.
தன்னை பக்கா தமிழ் பெண் என்று ஆத்மார்த்தமாக சொல்லிக் கொள்ளும் அந்த நடிகையின் முன்னோர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் அவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். இப்படி இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் படித்துவிட்டு வாய்ப்புக்காக காத்திருந்தவர் தான் அந்த நடிகை.
Also Read : கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு இல்லை.. 71 வயது நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 32 வயது நடிகை
ஆனால் பொம்மை போன்ற அழகுடன் இருந்த காரணத்தால் விரைவிலேயே ஹீரோயின் வாய்ப்பு அவருக்கு தானாகவே கிடைத்தது. அப்படித்தான் பிரபல இயக்குனரின் மகனான அந்த வாரிசு நடிகருக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு சான்ஸ் கிடைத்திருக்கிறது. அதை ஏற்றுக் கொண்ட அந்த நடிகையும் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் அவரின் அழகில் மயங்கி அவரை ஹீரோயின் ஆக செலக்ட் செய்தது அந்த நடிகர் தானாம். அதனால் அந்த நடிகர் நடிகைக்கு விதவிதமாக அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். ஆரம்பத்தில் நாசுக்காக சொல்லி வந்த நடிகர் ஒரு முறை நேரடியாகவே கேரவனுக்கு வருமாறு கேட்டு இருக்கிறார். ஆனாலும் அந்த நடிகை எதற்கும் மயங்காமல் முடியவே முடியாது என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
Also Read : அந்தரங்க டார்ச்சர் கொடுத்த திருமணமான நடிகர்.. வதந்தியை சமாளிக்க முடியாமல் மரணித்த 20 வயது நடிகை
இதனால் கடுப்பான அந்த நடிகர் ஒரு மாத காலம் ஷூட்டிங் நடைபெற்று இருந்த அந்த படத்தை ட்ராப் செய்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் மீடியாவில் அந்த நடிகைக்கு சுட்டு போட்டாலும் நடிப்பே வரவில்லை என்ற கதையையும் கட்டி இருக்கிறார். இதனால் கடுப்பான நடிகை எப்படியும் தன் திறமையை நிரூபித்து தீருவேன் என்று அடுத்தடுத்த படங்களில் நடித்து தன் நடிப்பை மக்கள் முன் கொண்டு சேர்த்தார்.
இப்படி அனைத்து மொழிகளிலும் நடித்து ஒரு ரவுண்டு வந்த நடிகை சில காலங்களுக்குப் பிறகு நடிப்பு போதும் என்று விலகிவிட்டார். ஆனாலும் மீ டு கலாச்சாரம் பரவி வந்த காலகட்டத்தில் இந்த விவகாரத்தை அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிரங்கமாக போட்டு உடைத்தார். இதற்கு பல எதிர்வினைகள் வந்தாலும் நடிகை தைரியமாகவே அதை எதிர்கொண்டார். தற்போது அந்த நடிகை தனக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
Also Read : திருமண தேவைக்காக வாய்ப்பு கேட்ட நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு 15 நாள் கால்ஷூட் கேட்ட 70 வயசு கிழவன்
