தன்னிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நடிகரின் கன்னத்தில் நடிகை ஒருவர் பளார் என அறைவிட்ட விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கில மாடல் மற்றும் நடன நடிகையாக இருப்பவர் ஸ்கார்லெட் வில்சன். இவர் பாகுபலி படத்தில் இடம் பெற்ற ‘மனோகரி’ பாடலில் நடிகர் பிரபஸோடு நடனம் ஆடியுள்ளார். மேலும், விஜய் நடித்த ஜில்லா படத்திலும் இவர் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடியுள்ளார்.

இவர் தற்போது ‘ஏக் சான்யோக்’ என்ற பாலிவுட் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலில் நடித்து வருகிறார். அப்போது, உமாக்கான் ராய் என்ற நடிகர் அவரிடம் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. ஒரு காட்சியில் வில்சனின் தலையை அவர் தொட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், உமாக்கானின் கன்னத்தில் பளார் என அறை விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த உமாக்கான், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.எனவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.அந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.