fbpx
Connect with us

Cinemapettai

அஜித் மட்டும் இதை செய்தால் நடப்பதே வேறு.. நடிகர் விவேக் விட்ட நேரடி சவால்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் மட்டும் இதை செய்தால் நடப்பதே வேறு.. நடிகர் விவேக் விட்ட நேரடி சவால்

தல அஜித்துடன் ஆரம்ப கட்டங்களில் இருந்து தற்போது வரை காமெடியனாக நடித்து வருபவர் விவேக். காமெடிகளிலேயே கருத்துக்களை கலந்து மக்களை சிந்திக்க வைக்கும் சிறந்த நடிகர். அப்துல் கலாம் ஐயாவின் விசுவாசி என்று கூட சொல்லலாம்.

தல அஜித் மற்றும் விவேக் கூட்டணியில் வெளிவந்த படங்களில் காமெடிகள் பெருமளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டவை. ஏன் சமீபத்தில் வந்த விஸ்வாசம் படத்தில் கூட இருவரும் காமெடியில் கலந்து கட்டி அடித்து இருப்பார்கள்.

சமீபகாலமாக விவேக் தொடர்ந்து மரங்கள் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தல அஜீத்துக்கு நேரடியான சவால் ஒன்றை விடுத்துள்ளார் விவேக்.

தாராள பிரபு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவேக்கிடம் ரசிகர் ஒருவர் பெரிய பிரபலம் ஒருவருக்கு சவால்விட வேண்டுமேயானால் யாருக்கு கொடுப்பீர்கள் என கேட்டுள்ளார்? அவர் கூறியதாவது, தல அஜித் தன்னுடைய ரசிகர்கள் ஒவ்வொருவரையும் ஒரு மரம் நட சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த சவால்.

இதனை அஜித் தன் வாயால் கூறவில்லை என்றாலும் வழக்கம்போல் அறிக்கை விடுவதை போல் வெளியிட்டாலே பலரும் இதை செய்வார்கள்.

தல அஜீத்துக்காக தன் உயிரையே கொடுக்கும் ரசிகர்கள் மரம் நட மாட்டார்களா, பொறுத்திருந்து பாருங்கள் தல ரசிகர்களை ஆட்டத்தை என்கிறார்கள்.

நல்லது நடந்தால் சரிதான் என்கிறது சுகாதாரத்துறை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top