Tamil Cinema News | சினிமா செய்திகள்
தயவு செய்து இதை கொஞ்சம் கவனியுங்கள்.! நடிகர் விவேக்கின் உருக்கமான பதிவு.!
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் தனகென்ன ஒரு நிலையான இடத்தை பிடித்திருப்பவர், செந்தில் கவுண்டமணி, வடிவேலு ஆகியோருடன் போட்டிபோட்டு நடித்து வந்தவர், இவர் நல்ல காமெடியன் என்பதை விட நல்ல மனிதர் இது பலபேருக்கு தெரியும்.
பல காமெடி நடிகர்கள் கேலி கிண்டல் மட்டும் காமெடியில் செய்வார்கள் ஆனால் விவேக் சிந்திக்கவைக்கும் காமெடி கருத்தும் சொல்லி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர், இவர் கலாம் பெயரில் பல சமூக சேவைகள் செய்து வருகிறார்.
இந்த சமூக சேவைக்கு பல தரப்பில் இருந்து அனைவரிடமும் நல்ல வரவெற்ப்பு கிடைத்தது இவர் தனது டிவிட்டரில் பல சமூக பிரச்சனையை முன் வைத்து பேசி வருகிறார் அண்மையில் சிறுமி ஆசிபா கொடூர மரணம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை கொடுத்துள்ளது இதற்க்கு நடிகர் விவேக் தனது கருத்தை வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது,குழந்தை பலாத்காரம் தொடர்கதையா? பெண்மையைப் போற்றும் இந்தியாவுக்கு அது நன்றன்று.உடனே மரண தண்டனை வழங்கப் பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும்.இணையத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்கள்,அதை எளிதில் பார்க்க உதவும் செல்போன்கள் இவையும் இக்குற்றங்களுக்கு காரணம்.பெற்றோர் கவனிக்க!
குழந்தை பலாத்காரம் தொடர்கதையா? பெண்மையைப் போற்றும் இந்தியாவுக்கு அது நன்றன்று.உடனே மரண தண்டனை வழங்கப் பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும்.இணையத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்கள்,அதை எளிதில் பார்க்க உதவும் செல்போன்கள் இவையும் இக்குற்றங்களுக்கு காரணம்.பெற்றோர் கவனிக்க!
— Vivekh actor (@Actor_Vivek) April 16, 2018
