தனுஷின் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக முன்னணி நடிகர்களுக்கு இணையாக அவரது முதல் நாள் முதல் காட்சி படம் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து கொள்கின்றனர்.
கடைசியாக வெளியான அசுரன் மற்றும் கர்ணன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தனுஷின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை குவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தனுஷுக்கு கிட்டத்தட்ட 8 க்கும் மேற்பட்ட படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதில் முக்கியமான திரைப்படம் தான் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் முண்டாசுப்பட்டி ராம் குமார் இயக்கும் படம்.
வால் நட்சத்திரம் என பெயரிடப்பட்டு வித்தியாசமான ஃபேண்டசி கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் கதையை மிக நீண்ட காலமாக எழுதி வருகிறார் ராம்குமார். ராட்சசன் படத்தின் வெற்றியை பார்த்து விட்டு தனுஷ் கூப்பிட்டு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
இந்த படத்தின் கதையை எழுதவே 2, 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ஒருவேளை தனுஷ் படத்திற்கு வாய்ப்பு கொடுக்காமல் உடனடியாக ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கியிருந்தால் தன்னுடைய மார்க்கெட்டும் வேற லெவலுக்கு சென்றிருக்கும் என வருத்தப்படுகிறாராம் விஷ்ணு விஷால்.
தனுஷ் படத்திற்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டாராம் ராம்குமார். ஆனால் ஏற்கனவே ராட்சசன் 2 படத்தின் கதை தயாராகி விட்டதாக விஷ்ணு விஷாலிடம் குறிப்பிட்டுள்ளார். தனுஷ் படத்திற்கு அனுப்பாமல் தன்னுடனே வைத்திருந்தால் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி போல விஷ்ணு விஷால் ராம்குமார் கூட்டணியும் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் என தன்னுடைய வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம்.