Tamil Cinema News | சினிமா செய்திகள்
புத்தாண்டில் தனது காதலியை அறிமுகப்படுத்திய விஷ்ணு விஷால்.. முத்தங்களால் மூழ்கடித்த ரொமான்டிக் ராட்சசன்
சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால், ராட்சசன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
நம்பிக்கை நாயகனாக உருவாகியிருக்கும் விஷ்ணு விஷால் தற்போது எஃப்.ஐ.ஆர் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஷ்ணு விஷால் தற்போது ஜூவாலா கட்டா என்ற விளையாட்டு வீராங்கனையை காதலித்து வருகிறார்.
விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புத்தாண்டு தினத்தன்று இருவரும் முத்தங்கள் மூலம் பாசங்களை பரிமாறிக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
விஷ்ணு விஷால் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். மேலும் விஷ்ணு விஷால் விவாகரத்து குறித்த காரணம் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனமுருகி வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vishnu-jwala
